மின் துறை அதிகாரிகள் வயிற்றில் புளியைக் கரைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி.. சட்டசபையிலேயே எச்சரிக்கை!
சென்னை: மின்மாற்றி பழுதை சரி செய்ய விவசாயிகள், மின் நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பட்ஜெட் மீதான விவாதம் 4வது நாளாக நடைபெறுகிறது. இன்று கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

சட்டப்பேரவையில் இன்று அதிமுக உறுப்பினர் ஜெயசங்கரன், மின் மாற்றி பழுது ஏற்பட்டால் அதனை மாற்றித் தர விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.
மின்மாற்றி பழுதை சரி செய்ய விவசாயிகள், மின் நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
"வானூர் தொகுதியில் பேரிடர்களின் போது புயலால் மின் கம்பங்கள் சாய்ந்து பாதிப்படைவதால் மேல்நிலை கம்பி புதைவட கம்பிகளாக மாற்றப்படுமா?" என்று சட்டப்பேரவையில் இன்று விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதி எம்.எல்.ஏ சக்ரபாணி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. படிப்படியாக நகராட்சி, பேரூராட்சி என தேவைப்படும் இடங்களில் புதைவட கம்பிகள் பதிக்கப்படும். வானுர் தொகுதியிலும் தேவைப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் கேள்விக்கு சட்டப்பேரவையில் பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "திருவள்ளூர் மாவட்டத்தில் 31 துணை மின் நிலையங்கள் அமைக்க இந்த ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுசெய்ய, ஆய்வு செய்து தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைத்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications