விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்! சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!
சென்னை: விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 11வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. காலை கேள்வி நேரத்தின் போது பல்வேறு பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளையும், தொகுதி பிரச்சனைகளையும் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பினர்.
அந்த வகையில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 18 மணி நேரம் மும்முனை மின்சாரத்தை 24 மணி நேர மும்முனை மின்சாரமாக வழங்க வேண்டும் எனக் கோரினார்.
மேலும், ஆழ்துளை கிணறு வைத்திருப்பவர்களிடம் அருகாமை நிலத்தை சேர்ந்தவர்கள் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளதால் அதற்கு கட்டணம் கட்டுவதற்கும் அவர்கள் தயாராக உள்ளதாகவும் ஆகையால் இது குறித்தும் அரசு பரிசீலிக்குமா என செந்தில்நாதன் வினவினார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கேள்விக்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் உத்தரவு என்றும் தற்போது மின் பகிர்மானத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இந்தப் பணிகள் விரைவில் முடியும் என நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, அதன் பிறகு விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற உறுதியை அளித்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பானது விவசாயிகளுக்கு பெரிதும் நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications