கேவலமா இல்லையா இது! AE யாருய்யா.. வரச்சொல்லு! அதிகாரிகளை வெளுத்து வாங்கிய அமைச்சர் தாமோ அன்பரசன்!
சென்னை: குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் வெளியேறியதை பார்த்த அமைச்சர் தாமோ அன்பரசன் அங்கிருந்த உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து காய்ச்சி எடுத்துவிட்டார்.
கேவலமாக இல்லையா இது, நீங்களே பாருங்க, உங்க வீட்டு பக்கத்தில் இப்படியிருந்தால் சும்மா இருப்பீர்களா என அதிகாரிகளை வெளுத்து வாங்கினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் ஆடிப்போய் நின்று கொண்டிருந்தனர். கழிவுநீர் பிரச்சனையை ஓரிரு நாட்களில் சரி செய்துவிடுவதாக அமைச்சரிடம் உறுதி அளித்தனர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்வதற்காக சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள கண்ணகி நகர், எழில் நகருக்கு சென்றிருந்தார் அமைச்சர் தாமோ அன்பரசன். அப்போது கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு கட்டிடங்களை ஒட்டி கொதகொதவென்று தேங்கி நின்றது.
இதனை பார்த்ததும் அமைச்சர் தாமோ அன்பரசன் கடுமையாக டென்ஷன் ஆனார். இது போதாதென்று லோக்கல் கட்சிக்காரர்களும் அதிகாரிகளின் மெத்தனம் குறித்து அமைச்சர் காதில் புகார் சொன்னார்கள். இதையடுத்து கோபத்தின் உச்சிக்கே சென்ற தாமோ அன்பரசன் ஆன் தி ஸ்பாட்டிலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து எல்லோர் முன்னிலையிலும் டோஸ் விட்டார்.

அமைச்சரின் இந்த ஆய்வின் போது தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உடனிருந்தார். அலுவலகத்தில் அமர்ந்து நாட்களை கழிக்காமல் அடிக்கடி ஆய்வுக்கு சென்று சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என பாடமும் நடத்தினார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications