திமுக ஆட்சிக்கு வந்த பிறகு.. 19,332 இளைஞர்களை தொழில் முனைவோராக உருவாக்கியுள்ளோம்! அமைச்சர் பெருமிதம்
இளைஞர்களை தொழில் முனைவோராக உருவாக்கி வருவதாக அமைச்சர் பெருமை.
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2ஆண்டுகளில் மட்டும் 19,332 இளைஞர்களை தொழில் முனைவோராக உருவாக்கியுள்ளோம் என அமைச்சர் தாமோ அன்பரசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
MSME நிறுவனங்கள் உரிமங்கள் பெற்று எளிதாக தொழில் தொடங்கும் வகையில் முதல்வரால் துவங்கப்பட்ட Single Window Portal 2.O மூலம் இதுவரை 12,113 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 10,947 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் பேசியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தாமோ அன்பரசன் இது தொடர்பாக பேசியதாவது;

உலகம் எங்கும் வாணிபம்
''சங்க காலம் முதலே தமிழர்கள் உலகம் எங்கும் வாணிபம் செய்து வந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டை ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக கொண்டு வர தமிழ்நாடு ஏற்றுமதி செயல் திட்டம்-2021 வெளியிட்டார். இதனை செயல்படுத்தும் விதமாக தமிழ் நாட்டில் மாவட்ட மற்றும் கிராமப்புர அளவில் தயாரிக்கப்படும் பொருட்களை, உலகெங்கும் ஏற்றுமதி செய்ய 10 இடங்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிணையில்லா கடன்
தமிழ் நாட்டிலுள்ள MSME நிறுவனங்களுக்கு பிணையில்லா கடன் எளிதில் கிடைக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலினால் ரூ.100 கோடி நிதியில் "தமிழ்நாடு கடன் உத்திரவாத திட்டம்" துவக்கி வைக்கப்பட்டது. இந்தியாவிலேயே MSME நிறுவனங்களுக்கு 90% வரை கடன் உத்திரவாதம் வழங்கி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Single Window Portal 2.O
MSME நிறுவனங்கள் உரிமங்கள் பெற்று எளிதாக தொழில் தொடங்கும் வகையில் முதல்வரால் துவங்கப்பட்ட Single Window Portal 2.O மூலம் இதுவரை12 ஆயிரத்து 113 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 10 ஆயிரத்து 947 தொழில் முனைவோருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. MSME தொழில்களின் வளர்ச்சிக்காக ரூ.171 கோடி மதிப்பீட்டில், 254 ஏக்கர் பரப்பளவில் 5 புதிய தொழிற்பேட்டைகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 537 ஏக்கர் பரப்பளவில் 8 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

2030-ல் 1 டிரில்லியன் டாலர்
2030-ல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கினை அடைய, MSME நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியிலும்- ஏற்றுமதியிலும் முன்னேற வேண்டும் அதற்கு தமிழ்நாடு அரசு என்றும் துணை நிற்கும்'' என்று அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்தார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications