எங்கெங்கே பிரச்சனைகள்? ஒப்பந்ததாரர்களிடம் கறார்! களமிறங்கிய தங்கம் தென்னரசு! பரபரக்கும் மின்வாரியம்
சென்னை: மின்வாரிய திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதில் எங்கெங்கே பிரச்சனைகள்? உள்ளது என்பதை கண்டறிய நேரடியாக களமிறங்கியுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
வட சென்னையில் சூப்பர் கிரிட்டிகள் தெர்மல் பவர் பிளாண்ட்டை நேரில் ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

''வட சென்னை அனல் மின் திட்டம் நிலை-3 கலைஞரால் 2010-ஆம் ஆண்டு 800 மெகாவாட் அளவிற்கு அனல் மின் நிலையத்தின் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு இத்திட்டப் பணிகள் முடிந்து உற்பத்தியை தொடங்கியிருக்க வேண்டும்.''
''சூப்பர் கிரிட்டிகள் தெர்மல் பவர் பிளாண்ட் மிக உய்ய மின் நிலையத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தேன். இந்த திட்டம் மிக முக்கியமான மின்சார உற்பத்தி திட்டங்களில் ஒன்று. முதலமைச்சர் அவர்களால் "ஐகானிக்" திட்டம் என்று அறிவிக்கப்பட்ட ஆய்வு செய்யப்பட்ட உயரிய திட்டம். இந்த திட்ட பணிகள் எந்தளவிற்கு இருக்கிறது உடனடியாக இதனை முடித்துவிட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் அண்மையில் மேற்கொண்ட ஆய்விலே அறிவுறுத்தியிருந்தார். ''
''அதனுடைய அடிப்படையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரும், நானும் மற்றும் உயர் அதிகாரிகளும் மின்சார உற்பத்தி நிலையத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற பணிகளை ஆய்வு செய்திருக்கிறோம். மிக விரைவில் குறித்த காலத்திற்குள் இதை முடிக்க வேண்டும் என்றும் ஒப்பந்ததாரர்களிடத்திலே நாங்கள் அறிவுறுத்தியிருக்கிறோம், அவர்களும் விரைவாக முடிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள். ''

''நாங்கள் கடந்த ஆய்வுக்கூட்டத்தில் சொன்னதைப் போல் அக்டோபர் மாதத்திற்குள் முடிப்பதற்கான முயற்சிகளை எடுப்போம். எங்கெங்கே பிரச்சனைகள் இருக்கிறது, ஒப்பந்ததாரர்கள் எந்த அளவிலே அந்த பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும், இந்த பணிகளின் தாமதம், ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தினுடைய முடிவு தேதியை பாதிக்கிறது, யார் என்னென்ன வேலைகளை உடனடியாக செய்ய வேண்டும், யார் அதற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டு எந்த தாமதமும் ஏற்படாமல் மிக விரைவிலே இந்த பணிகளை முடித்து இந்த மின் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவோம். ''
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications