ஜனவரி மாதம் முழுவதும் தமிழகமெங்கும் திருவிழா தான்! கொண்டாட்டத்துக்கு பஞ்சமிருக்காது! நீளும் லிஸ்ட்!
சென்னை: ஜனவரி மாதம் வந்துவிட்டாலே தமிழ்நாடு முழுவதும் விழாக்கோலம் பூணக்கூடிய காட்சிகளை காணலாம் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழர் விருதுகள், ஜல்லிக்கட்டு, சென்னை சங்கமம், புத்தக கண்கண்காட்சி, அயலக தமிழர் திருநாள், சர்வதேச சென்னை புத்தக கண்காட்சி, தமிழர் விருதுகள், சென்னை இலக்கிய விழா, என இம்மாதம் முழுவதும் எண்ணற்ற விழாக்களும், நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது;

ஜனவரி மாதம்
பொதுவாக ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் விழாக்கோலம் பூணக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்புகள் அமைந்திருக்கிறது. விளவுமலி முதூர் என்று இலக்கியங்களில் குறிப்பிட்டிருப்பதுபோல, தமிழ்நாட்டின் நிலப்பரப்பு எங்கும் வரக்கூடிய ஜனவரி மாதம் தமிழர்தம் வரலாற்றை நம்முடைய இலக்கியச் செழுமையை, நாகரீகத்தை, பண்பாட்டை, நாட்டுப்புற கலைவடிவங்களை அடையாளப்படுத்தக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள், தமிழ்நாடு எங்கும் வரக்கூடிய ஜனவரி மாதம் நிகழ்த்தப்படவிருக்கிறது.

ஜல்லிக்கட்டு
குறிப்பாக, ஏறு தழுவுதல், பன்னாட்டு புத்தகக்காட்சி, அயலக தமிழர் நாள், மாபெரும் தமிழ் கனவு திட்டம், சென்னை சங்கமம், தமிழர் விருதுகள், சென்னை இலக்கிய விழா, சென்னை புத்தகக்காட்சி அதனுடைய முத்தாய்ப்பாக "பொங்கல் திருவிழா" என்று தமிழர்தம் பெருமையைப் பறைசாற்றக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் நம்முடைய முதலமைச்சருடைய ஆணையின்படி, அவருடைய முன்னெடுப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் வரக்கூடிய ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது.

புத்தகக்காட்சி
இந்த கொண்டாட்டங்கள் புத்தாண்டில் துவங்க இருக்கிறது. அதனுடைய மிக முக்கியமான ஒரு பகுதியாக, சென்னை சங்கமம் நிகழ்ச்சி, இது நம்ம ஊரு திருவிழாவாக இணைந்து ஒரு புத்தாக்கத்துடனும், புத்துணர்ச்சியுடனும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி துவங்கி, 17ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக சென்னை மாநகரில் நடைபெறவிருக்கிறது. கடந்த ஆண்டு இது நம்ம ஊரு திருவிழாவாக நடைபெற்றிருந்த நாட்டுப்புற கலை நிகழ்ச்சி இந்த ஆண்டு சென்னை சங்கமம் புதுப்பொழிவோடு இணைந்து சென்னை சங்கமம், இது நம்ம ஊரு திருவிழாவாக சிறப்பான வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியினுடைய ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சிகள் மிளிர இருக்கிறது.

கலை விழாக்கள்
இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டினுடைய பல்வேறு பகுதிகளிலும், 7 மண்டலங்களாக இருக்கக்கூடிய சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்டிருக்கக்கூடிய எல்லா இடங்களிலும், இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் நான் ஏற்கனவே குறிப்பிட்டுச் சொன்னதைப்போல, மிகச்சிறப்பான ஒரு பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்களுடைய வடிவங்களை அடையாளப்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளாகவும், அதோடு இணைந்து பஞ்சாப், அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்றிருக்கக்கூடிய இதர மாநிலங்களிலிருந்தும், சில நிகழ்ச்சிகளை இணைந்து நம்முடைய ஒருமைப்பாட்டையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சிகள் அமைய இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
மிக முக்கியமாக நிகழ்ச்சியினுடைய துவக்கமாக இருக்கக்கூடிய ஜனவரி 13ஆம் நாள் மாலை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதனுடைய தொடக்க விழாவினை சென்னை தீவுத்திடலில் அன்றைக்கு மிகப் பெரிய பிரம்மாண்டமான கலை விழாவோடு இதை துவங்கி வைக்கிறார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications