நெகிழ்ச்சி.. முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்.. அப்படியே எமோஷனல் ஆகி.. கண்கள் கலங்கிய டிஆர்பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில் மிகவும் உருக்கமாக காணப்பட்டார்.

சென்னை முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி பேசுகையில் அவர் சட்டென எமோஷன் ஆனார். சட்டென அவரின் பேச்சு மாறி லேசாக கண்கள் கலங்கியது. இந்த மாநாடு உருவாக்க போகும் மிக அதிக அளவிலான வேலைவாய்ப்பு குறித்து பேசும் போது சட்டென அவரின் கண்கள் கலங்கியது.

Minister TRB Rajaa got emotional about the Tamil Nadu global investors meet

உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடங்கும் முன் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, இந்தியாவில் உழைக்கும் மகளிரில் 43% தமிழ்நாட்டில் உள்ளனர்.

உலக முதலீட்டாளர் மாநாடு இந்தியா காணாத அறிவுத் திருவிழாவாக இருக்கும்; ஆட்டோமொபைல், டயர் உற்பத்தியில் முன்னணியில் தமிழ்நாடு; இந்தியாவின் 2ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு; நடப்பு நிதியாண்டில் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி; சுகாதாரம் மற்றும் கல்வித்துறையிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் ஆண்டிற்கு 1.5 லட்சம் பொறியாளர்கள் உருவாகின்றனர்

தமிழ்நாடு அரசு முன்னேற்றக் கொள்கையில் தீவிரமாக உள்ளது. திறமையுள்ள மனிதவளம் தமிழ்நாட்டில் உள்ளது தரமணியில் இருக்கும் ஐ.டி பார்க் போல வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால் உருவாக்க போகும் வேலைவாய்ப்புகள் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகின்றன என்று அவர் கூறினார்.

முதலீடுகள்: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும்.

இன்று பல முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. அதில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைக்க ₹6,180 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

தூத்துக்குடி, திருநெல்வேலியில் JSW நிறுவனம் ₹12,000 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்பட்டு உள்ளது.

ஓசூரில் உள்ள ஐபோன் உதிரி பாக ஆலையில் விரிவாக்கம் செய்ய டாடா நிறுவனம் ரூ.12,800 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. . கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ₹12,082 கோடி மதிப்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ உள்ளது

தூத்துக்குடியில் ₹16,000 கோடி முதலீட்டில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க, வியட்நாமைச் சேர்ந்த VinFast நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 3,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு. இந்த ஆண்டிலேயே உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

அமெரிக்காவின் First Solar நிறுவனம் - ₹5600 கோடி முதலீடு செய்ய உள்ளது. சென்னையில் பெகட்ரான் - ₹1000 கோடி முதலீடு (8000 பேருக்கு வேலைவாய்ப்பு) செய்ய உள்ளது. சென்னையில் மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் - ₹200 கோடி முதலீடு செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் டிவிஎஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.5,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6,000 கோடி முதலீடு செய்ய உள்ளது;.

முக்கிய நிறுவனம்: சென்னையில் நடக்கும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது.

இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ & Differently Abled ஆக இருக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project (Global FMCG) நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+