குடும்பத்தோடு சென்று முதல்வரை சந்தித்த அமைச்சர் டிஆர்பி ராஜா.. நிலாவை கைகுலுக்கி பாராட்டிய ஸ்டாலின்!
சென்னை: குடும்பத்தோடு சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் அமைச்சர் டிஆர்பி ராஜா. தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகள் நிலாவுக்கு பாராட்டு தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகளான நிலா ராஜா
டெல்லியில் நடைபெற்ற 66ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தங்கம் வென்றார். இதையடுத்து டெல்லியில் இருந்து அண்மையில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அவரது மனைவி ஷர்மிளா ஆகியோர் தங்கள் மகள் நிலாவை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா
ராஜா பேசுகையில், “தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பதக்கம் வென்ற போது மிகவும் பெருமையாக இருந்தது. அதே போன்று இரண்டாவது முறையும் பதக்கம் வென்றதில் மிக பெருமையாக உள்ளது. நான் போட்டியில் வெற்றி பெற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாத்தா என்னை அழைத்து வாழ்த்து கூறினார். உதய் மாமாவும் எனக்கு வாழ்த்து கூறினார் எனத் தெரிவித்தார்.” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அவரது மனைவி ஷர்மிளா, மகள் நிலா ராஜா பாலு ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தனர். டெல்லியில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகள் நிலாவுக்கு பாராட்டு தெரிவித்து, தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பியின் மகன் டிஆர்பி ராஜா, 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்முறையாக மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் வென்ற அவர் மூன்றாவது முறையாக தற்போது மன்னார்குடி எம்எல்ஏவாக உள்ளார்.
திமுக ஐ.டி விங் மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வரும் டிஆர்பி ராஜா, தற்போது தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராக உள்ளார். டிஆர்பி ராஜா - ஷர்மிளா தம்பதியருக்கு சூர்யா என்ற மகனும், நிலா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், மகள் நிலா மற்றும் மனைவி ஷர்மிளாவோடு சென்று முதல்வரை சந்தித்துள்ளார் டிஆர்பி ராஜா.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications