கொட்டும் மழையில் நனைந்து கொண்டே.. பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. நெகிழ்ந்த மக்கள்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் ஆயிரம் பேருக்கு அரிசி, வெல்லம், புத்தாடைகள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உதயநிதி ஸ்டாலின் நனைந்தபடியே பொங்கல் பரிசுத்தொகுப்பை கொடுத்தது அங்குள்ள மக்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். கடந்தாண்டு இந்த பொங்கல் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது.
அதன்படி இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்ய அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதன்படி வரும் 12ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ.1000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக இன்று காலையில் இருந்து ரேஷன் கடைகளில் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.
இதற்கிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பிலும் மக்களுக்கு பொங்கள் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் ஆயிரம் பேருக்கு அரிசி, வெல்லம், புத்தாடைகள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினார்.
பரிசுத்தொகை வழங்கி கொண்டு இருந்த போதே மழை பெய்ய தொடங்கியது. எனினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நனைந்தபடியே பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினார். மழையில் நனைந்தபடியே உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகுப்பை தனது கைகளாலே அனைவருக்கும் கொடுத்தார். இது அங்குள்ள மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications