அண்ணாமலையை சும்மா விட மாட்டோம்! உதயநிதி ஸ்டாலின் உறுதி! இனிமேல் தான் கச்சேரி இருக்கு!
சென்னை: திமுக மீதும் தன் மீதும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி அவதூறு பரப்பிய அண்ணாமலையை தாம் சும்மா விடப் போவதில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி DMK Files என்ற பெயரில் திமுக முக்கிய பிரமுகர்கள் மீது அண்ணாமலை சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.
இதையடுத்து இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க அண்ணாமலைக்கு 48 மணி நேரம் கெடு விதித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது திமுக. அதுமட்டுமல்ல அவதூறுகளை அள்ளி வீசியதற்காக ரூ.500 கோடி இழப்பீடுத் தொகையும் அண்ணாமலையிடம் திமுக கேட்டிருக்கிறது.

இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, தனக்கு திமுக ரூ.501 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக இப்தார் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலையை சும்மா விட மாட்டோம் என சூடாக தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களால் அண்ணாமலையிடம் கேள்வி கேட்க முடிந்ததா என்று வினவிய அவர் ஏதோ ஸ்கூல் டீச்சர் போல் அண்ணாமலை பாடம் எடுக்கிறார், அதைக்கேட்டு விட்டு நீங்களும் வருகிறீர்களே என செய்தியாளர்கள் மீதான தனது ஆதங்கத்தை கொட்டினார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஒரு பக்கம் அவதூறு வழக்கு தொடரவுள்ள நிலையில், தானும் அண்ணாமலை மீது தனியாக ஒரு மான நஷ்ட வழக்கு தொடருவேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இவர் கூறுவதை வைத்து பார்த்தால் எந்தெந்த திமுக பிரமுகர்கள் மீது அண்ணாமலை குற்றஞ்சாட்டினாரோ, அவர்கள் அனைவரும் தனி தனியாக மான நஷ்ட வழக்கு தொடரும் திட்டத்தில் இருப்பது தெரிகிறது.
இதனிடையே Dmk Files 2.0வை கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பிறகு வெளியிட அண்ணாமலை திட்டமிட்டிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே அவர் மீது வழக்குகள் தொடர திமுக முனைப்பு காட்டோ வருகிறது.
-
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை?












Click it and Unblock the Notifications