உயிரை பணயம் வைத்து சென்னை வெள்ளத்தில் பாடுபட்ட தன்னார்வலர்கள்.. நேரில் அழைத்து பாராட்டிய உதயநிதி!
சென்னை: சென்னையில் மழை வெள்ள பாதிப்பின் போது மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பேருதவி புரிந்த தன்னார்வலர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
டிசம்பர் மாத தொடக்கத்தில், மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்கள் தத்தளித்தன. தமிழக அரசு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. அதேசமயம், தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கியதால் ஏராளமானோர் தொடர்பு கொண்டு அரசின் உதவிகளைப் பெற முடியவில்லை. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தன்னார்வலர்கள் ஏராளமானோர், மீட்பு பணிகளை ஒருங்கிணைத்தனர்.

மேலும், உதவி கோரி வரும் கோரிக்கைகளை, அதிகாரிகள், அமைச்சர்கள், தொண்டு நிறுவனங்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உதவிகளைப் பெற்றுத் தரவும் ஏராளமானோர் செயலாற்றினர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களின் முயற்சிகள் பெரும் பாராட்டைப் பெற்றன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தன்னார்வலர்களை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
பரபர ஆக்ஷன்! மாற்றுத்திறனாளிகளுக்காக உதயநிதி ஸ்டாலின் செய்த மிகப்பெரிய உதவி.. நெகிழ்ந்த பேராசிரியர்
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை, பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியது. அத்தகைய பேரிடர் நேரத்தில், மக்களை காக்க அரசுடன் கைகோர்த்து களத்தில் இறங்கி மீட்பு - நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களை இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை, பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியது.
— Udhay (@Udhaystalin) December 30, 2023
அத்தகையப் பேரிடர் நேரத்தில், மக்களை காக்க அரசுடன் கைகோர்த்து களத்தில் இறங்கி மீட்பு - நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களை… pic.twitter.com/Ok7ihmwxWC
தங்களின் உயிரைப் பணயம் வைத்து வெள்ள நிவாரணப் பணிகளை செய்த போது, களத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள். தன்னார்வலர்களின் நற்பணிகள் தொடரட்டும்! மனிதநேயம் தழைக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications