மீண்டும் எய்ம்ஸ் செங்கலுடன் பிரச்சாரமா? வந்துவிழுந்த கேள்வி.. உதயநிதி ஸ்டாலின் சூசக பதில்!
செங்கலுடன் மீண்டும் பிரச்சாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதுரை எய்ம்ஸ் செங்கலுடன் பிரச்சாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதேபோல் ஈரோடு இடைத்தேர்தலில் அமைச்சர்கள் பணியாற்றுவதால், எந்த பணிகளும் தேக்கமடையவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஒவ்வொரு நாளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக முக்கிய தலைவர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாதது குறித்து திமுகவினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் செங்கலுடன் பிரச்சாரம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில், தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படுகிற 'காலத்தால் கரையாத காட்சிகள்' என்ற புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். இந்த கண்காட்சியை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

நினைவுகள்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், புகைப்பட கண்காட்சியில் எனது புகைப்படங்களும் உள்ளது. அதேபோல் முக்கியத் தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அதனை பார்க்கும் போது பழைய நினைவுகள் வந்தன என்று தெரிவித்தார்.

பிரச்சாரம் நிச்சயம்
தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தல் பற்றிய கேள்விக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். நான் கண்டிப்பாக பிரச்சாரத்திற்கு செல்வேன். அடுத்த வாரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்வதால் பணிகள் பாதிக்கப்படவில்லை. அமைச்சர்கள் அனைவரும் அவர்களின் பணிகளையும் சேர்த்து செய்து வருகின்றனர். அது வரும் நாட்களில் தெரியும் என்று தெரிவித்தார்.

செங்கலுடன் பிரச்சாரம்?
பின்னர், மதுரை எய்ம்ஸ் செங்கலுடன் மீண்டும் பிரச்சாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார். தொடர்ந்து துறை ரீதியிலான கேள்விகளுக்கு, ஏற்கனவே விளையாட்டுத் துறையில் ஏராளமான பணிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அதனை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. வரும் நாட்களில் அதனை சரி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications