அமித் ஷா வந்த மறுநாளே.. செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர்.. கோர்ட்டை குலுக்கிய வழக்கறிஞர் வாதம்
சென்னை: அமித்ஷா வந்த அடுத்த நாள் நடவடிக்கை எடுத்துள்ளனர், மத்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாடு வந்தபோது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், இதை திட்டமிட்டு செய்துள்ளனர், என்று செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளார்.
நேற்று முதல்நாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது.

மொத்தமாக 17 மணி நேரம் சோதனை நடந்தது. வீட்டோடு சேர்த்து தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
சோதனை முடிந்த அவரின் வீட்டிற்கு உயரதிகாரிகள் வந்தனர். அவரை அலுவலகம் கொண்டு செல்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அமலாக்கத்துறை மனு: இதையடுத்து நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி அல்லி முன் நடந்த விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு இந்த மாதம் 28ம் தேதி வரை அதாவது 15 நாட்களுக்கு நீதிமன்ற காவல் உத்தரவு போடப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை மனுவில், நீதிமன்ற காவலுக்கு பதிலாக எங்களுக்கு கஸ்டடி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜி தரப்பு இடைக்கால ஜாமீன் கேட்டது. இந்த மனுவில் இன்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் இளங்கோவன் வாதம் செய்தார். அதில் , அமித்ஷா வந்த அடுத்த நாள் நடவடிக்கை எடுத்துள்ளனர், மத்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாடு வந்தபோது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை திட்டமிட்டு செய்துள்ளனர்
அடுத்த நாள் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதிக்க கூடாது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனுவை நிராகரிக்க வேண்டும்;
ஏற்கனவே போதுமான விசாரணையை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை செய்துள்ளது. மருத்துவ காரணங்களின் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும்; உயர்நீதிமன்ற அமர்வு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதித்துள்ளது; அமலாக்கப் பிரிவு காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது, என்று வாதம் வைத்தனர்.
இதற்கு எதிராக அமலாக்கத்துறை வைத்த வாதத்தில், செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். உண்மையை கண்டறிய அமலாக்க பிரிவு காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம்.
அதனால் அவரை கஸ்டடி எடுக்க எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி வீடியோ கால் மூலம் மருத்துவமனையில் இருந்து கலந்து கொண்டார். இதில் செந்தில் பாலாஜியிடம் வீடியோ வழியாக நீதிபதி அள்ளி கேள்வி எழுப்பி வருகிறார்.












Click it and Unblock the Notifications