இங்க பாருங்க.. "சூரிய காந்தியை உற்பத்தி செய்யும் சூரியன்.." பட்ஜெட்டில் பஞ்ச் அடித்த பன்னீர்செல்வம்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சூரியகாந்தி சாகுபடி தொடர்பான அறிவிப்பின்போது சூரியகாந்தியை உற்பத்தி செய்யும் சூரியன் எனப் பேசியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, முதல்முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக இடைக்கால வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், நேற்று முழுநீள தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று 2022-23ம் நிதியாண்டிற்கான வேளாண்மைத்துறையின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் வேளாண்மைத்துறை நிதிநிலை அறிக்கையில், பல்வேறு பயிர்சாகுபடிகள், வேளாண் கல்வி, நவீன வேளாண் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக எண்ணெய் வித்து பயிர் சாகுபடி திட்டங்கள் குறித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசித்தார். தமிழ்நாட்டில் சூரிய காந்தி பயிர் உற்பத்தியை அதிகரிக்க ரூ.28.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நிலக் கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வேளாண் துறை அமைச்சர் கூறினார்.
குறிப்பாக சூரியகாந்தி பயிர்கள் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இடம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியதை சுட்டிக்காட்டிய அமைச்சர், அதை செயல்படுத்திக்காட்ட சூரியகாந்தி பயிரிடுவதை அதிகரிக்க இருப்பதாக தெரிவித்தார். அப்போது சூரியகாந்தியை உற்பத்தி செய்யும் சூரியன் என அவர் வசனம் பேசினார்.
Recommended Video
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம், சூரியகாந்தி சாகுபடி தொடர்பான அறிவிப்பின்போது சூரியகாந்தியை உற்பத்தி செய்யும் சூரியன் எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications