1971-ஆம் ஆண்டு் இந்தியா-பாகிஸ்தான் போர் காலத்தில் நடந்த பிறகு, இப்போது மீண்டும் நாடு முழுக்க ஒத்திகை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நாளை பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடைசியாக 1971 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட போது ஒத்திகை நடைபெற்றது. அதன்பிறகு 54 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடைபெற உள்ளது.

பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலால் நாடே கொதித்து போய் உள்ளது. அப்பாவி பொதுமக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளது.

ministry-of-home-affairs-order-for-civil-defence-after-51-yeras-as-is-a-first-since-1971

இந்தியாவின் பதிலடி

இந்தியாவின் பதிலடி நடவடிக்கையால் பாகிஸ்தான் பீதி அடைந்து இருக்கிறது. ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தான், இந்தியா தாக்கினால் நிலைமை என்ன ஆகுமோ என கதி கலங்கி வருகிறது. இதனிடையே பாகிஸ்தான் அமைச்சர்கள் சிலர் இந்தியாவை மிரட்டும் தொனியில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். பாகிஸ்தான் ராணுவத்தினரும் ஏவுகணை ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா ஆயத்தமாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே பிரதமர் மோடி உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், நேற்று பாதுகாப்புத்துறை செயலரை சந்தித்தார். முன்னதாக, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

நேற்று பாதுகாப்புத்துறை செயலருடன் ஆலோசித்த சிறிது நேரத்தில், முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது, எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராகும் வகையில் சில மாநிலங்களில் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

54 ஆண்டுகளில் முதல் முறை

வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை, சைரன் ஒலிகளை எழுப்புதல் ஆகியவற்றுடன், தீவிர தாக்குதல் ஏற்பட்டால் தங்களை தற்காத்துக்கொள்ளும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய போர்க்கால ஒத்திவைக்கப்படுவது 54 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

ministry-of-home-affairs-order-for-civil-defence-after-51-yeras-as-is-a-first-since-1971

கடைசியாக கடந்த 1971 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட போது ஒத்திகை நடைபெற்றது. தமிழகத்தில் கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய இடங்களில் ஒத்திகை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எப்படி செயல்பட வேண்டும்?

இந்த போர் ஒத்திகையின் போது, போர்க்காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பர்றி தன்னார்வல்ர்கள் , மாணவ மாண்விகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். காயம் அடைந்தவர்களை மீட்பது தாக்குதல்களில் இருந்து அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

இரவு நேரத்தில் மின்சாரம் துண்டித்து, இருள் சூழ்ந்த அகல் விளக்கு ஓளியில் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். அதேபோல, அணு மின் நிலையங்கள் உள்பட முக்கியமான பாதுகாப்பு விஷயங்கள் அமைந்துள்ள இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் என நாடு முழுக்க 259 இடங்களில் இந்த போர் ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+