“திமுகவின் கொத்தடிமை ரகுபதி”.. எடப்பாடி அப்படி சொன்ன அடுத்த சில நிமிடங்களில் நடந்த மேஜர் மாற்றம்!
சென்னை: தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரகுபதி சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்த நிலையில் அவரிடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நீர்வளத்துறை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் வசமே இருக்கிறது.

அமைச்சரவை இலாகா மாற்றம்
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, செந்தில்பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கரிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜி வசமிருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியிடம் இருந்த வனத்துறையும், மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சராக இருக்கும் ரகுபதிக்கு, அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமவளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை இலாகா மாற்றம் குறித்து முதலமைச்சர் பரிந்துரைத்ததை ஏற்று ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளது.
ரகுபதி பேச்சு
பெண்கள் வேலைக்குச் செல்வதில் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கல்லூரி செல்லும் பெண்களும் தமிழ்நாட்டில் தான் அதிகம். தூங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இதெல்லாம் புரியாது. யாராவது அவரை தட்டி எழுப்பிச் சொல்லுங்கள் எனக் கூறி இருந்தார் அமைச்சர் ரகுபதி.
எடப்பாடி பேச்சு
இந்நிலையில் சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "நான் தூங்கிக் கொண்டு இருப்பதாக அமைச்சர் ரகுபதி கூறுகிறார். நான் விழித்துக்கொண்டு சிறப்பாக செயல்படுவதால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ரகுபதி இப்படிச் சொல்கிறார். அரசும், காவல்துறையும், முதலமைச்சரும் தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறார்.
ரகுபதி மீது சரமாரி தாக்கு
அமைச்சர் ரகுபதியை பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொத்தடிமையாக செயல்பட்டு வருகிறார். ரகுபதியை அமைச்சராகி அழகு பார்த்ததே அதிமுக தான். ரகுபதியை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கி, ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் கொடுத்து இந்த நாட்டிற்கு அடையாளம் காட்டியதே அதிமுக தான். அவர் தற்போது நன்றியை எல்லாம் மறந்து திமுகவிற்கு அடிமைக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
மக்களுக்காக என்றைக்கும் உழைக்கும் கட்சி அதிமுக. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் சேவை செய்வதில் முன்னோடியாக இருப்பது அதிமுக தான். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடக்கின்றன" என விமர்சித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ரகுபதி பெயரைச் சொல்லிக் காட்டமாக விமர்சித்துப் பேசிய அடுத்த சில நிமிடங்களில் ஆளுநர் மாளிகையில் இருந்து அமைச்சர்கள் இலாகா மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியானது. அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, துரைமுருகனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications