கடலூர் அருகே காவல் நிலையத்தில் நடந்த தவறு.. ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்.. ஐகோர்ட் அதிரடி
சென்னை: கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் 2015-ம் ஆண்டு பதிவான வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட கோரி விஜயராணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் நீதிபதி கேட்ட கேள்விக்கு, போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீலால் பதில் சொல்ல முடியவில்லை. இதையடுத்து 11 இன்ஸ்பெக்டர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அடுத்ததாக ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது
காவல் நிலையத்தில் வழக்குகள் பல பதிவாகும். அந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தால் தான், வழக்கு விசாரணை விரைந்து நடந்து நீதி கிடைக்கும். குற்றவாளியாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட தரப்பாக இருந்தாலும், குற்றப்பத்திரிக்கை என்பது மிகமுக்கியமானது. ஒரு வேளை போலீசார் விசாரித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றாலும், ஆண்டு கணக்கில்கூட வழக்கு கிடப்பில் கிடக்கும்.

கடலூர் பெண் வழக்கு
அதேபோல் ஒருவேளை வழக்கு முடித்து வைக்கப்பட்டால், அதுபற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்படியே காவல்துறை, வழக்கு முடித்து வைக்கப்பட்ட விவகாரத்தை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்குமே வழக்கு முடிந்த விவகாரம் தெரியாது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பார்ப்போம்.
குள்ளஞ்சாவடி
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் 2015-ம் ஆண்டு வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட கோரி புகார்தாரர் விஜயராணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். அப்போது, இந்த புகாரை 2017-ம் ஆண்டே முடித்து வைத்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறியிருக்கிறார்கள்.
நீதிபதி கேள்வி
அப்போது நீதிபதி வேல்முருகன், வழக்கை முடித்துவைத்து சம்பந்தப்பட்ட கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதா? அதுகுறித்து புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீலால் பதில் சொல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காலத்தில் இருந்து தற்போது வரை இன்ஸ்பெக்டர்களாக பணி செய்த பட்டியலை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, 14 இன்ஸ்பெக்டர்கள் பெயர்கள் கொண்ட பட்டியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், இந்த வழக்கை விரைவாக விசாரிக்க கோரி 2015-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய தவறிய 11 இன்ஸ்பெக்டர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி.க்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும், 2015-ம் ஆண்டு முதல் கடலூர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய அதிகாரிகளின் பெயர் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
இதன்படி, 2015-ம் ஆண்டு முதல் கடலூர் எஸ்பியாக பணியாற்றிய சி.விஜயகுமார் ஐ.பி.எஸ்., (2023-ம் ஆண்டு இறந்து விட்டார்), பி.சரவணன் ஐ.பி.எஸ்., (தற்போது விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு), ஸ்ரீஅபிநவ் ஐ.பி.எஸ்., (ஐதராபாத் போலீஸ் அகாடமி உதவி இயக்குநர்), எஸ்.சக்தி கணேசன் (தேசிய புலனாய்வு முகமை எஸ்பி), ஆர்.ராஜாராம் (தஞ்சாவூர் எஸ்பி), எஸ்.ஜெயக்குமார் தற்போது கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரது பெயர்களை கொண்ட பட்டியலை அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
டிஜிபிக்கு உத்தரவு
இந்த பட்டியலை பெற்றுக் கொண்ட நீதிபதி, "மறைந்த விஜயகுமார் நீங்கலாக பிற போலீஸ் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்திருந்தால், வழக்கை முடித்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து இருப்பார்கள். இந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் பொறுப்பில் இருந்து தவறியுள்ளனர். எனவே, பி.சரவணன் முதல் ஜெயக்குமார் வரையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் மீது டி.ஜி.பி. துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும் விசாரணை
மேலும், மனுதாரர் புகார் மீதான வழக்கை சட்டப்படி இன்ஸ்பெக்டர்கள் கையாளவில்லை. எனவே, ஒரு இன்ஸ்பெக்டரை டி.ஜி.பி., நியமித்து இந்த வழக்கை மீண்டும் விசாரித்து 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" இவ்வாறு நீதிபதி வேல்முருகன் கூறினார்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications