பெரிய தப்பு பண்ணிட்டாங்க.. இந்தியா VS பாகிஸ்தான் போட்டி! ஆமா ஷர்துல் எதுக்கு? ஷமி, அக்‌ஷர் பெஞ்சில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் தேர்வில் தேர்வுக்குழு செய்த தவறுகள் என்னவென்று பார்ப்போம்.

வெறித்தனமான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கூட கடந்த சில ஆண்டுகளாக முன்வைத்து வரும் குற்றச்சாட்டு என்னவென்று வீரர்கள் தேர்வு. உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் திறமையை நிரூபித்த வீரர்களை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு ஃபார்ம் அவுட் ஆன வீரர்களையும், சுமாராக விளையாடிய வீரர்களையும் அணியில் தேர்வு செய்கிறார்கள் என்பது.

Mistake in Indian players selection against Pakistan match in Asia cup

அதேபோல் ஐபிஎலில் கலக்கிய வீரரை டெஸ்ட் தொடரில் எடுப்பது, ரஞ்சியில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு மறுக்கப்படுவது, 150 கிமீ வேகத்தில் வீசும் பந்துவீச்சாளர், இடது கை பந்துவீச்சாளர்கள் கிடைத்தும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், மீடியம் பேஸ் பவுலர்களுக்கு வாய்ப்பு அளிப்பது என பல்வேறு தவறுகளை பிசிசிஐயின் தேர்வுக்குழு செய்கிறது.

இதன் பின்னர் சாதி, மத ரீதியிலான அரசியல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் நல்ல சராசரியை வைத்திருந்தும் தொடர்ந்து அவருக்கு ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு வழங்கிவிட்டு ஒதுக்குவதை பிசிசிஐ வேலையாக வைத்துள்ளது.

அதேநேரம் ஒருநாள் போட்டிகளில் சில வீரர்கள் எத்தனை முறை சொதப்பினாலும் இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தேர்வுக்குழு தலைவராக சில வாரங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். அதன் பிறகாவது நிலைமை மாறும் என்று பார்த்தால் சோகங்கள் தொடர் கதையாக இருக்கின்றன.

ஆசியக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் தேர்வும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது, வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிகிற்கு முந்தைய போட்டிகளில் வாய்ப்பே வழங்காமல் இந்த தொடரிலேயே சேர்க்காதது, இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அணியில் இடம்பெறாதது, சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சாஹல் அணியில் இல்லாதது என பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில் இன்று இலங்கையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இணையாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழை குறிக்கீட்டுடன் நடைபெற்று வரும் இப்போட்டியில் தற்போதைய நிலவரப்படி இந்தியா 22 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை எடுத்துள்ளது.

ரன் ரேட் நன்றாக இருந்தாலும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களிடம் முன் வரிசை பேட்ஸ்மேன்களான ரோகித் ஷர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ஷுப்மன் கில் ஆகியோர் அடுத்தடுத்து வீழ்ந்தனர். இதில் ஸ்ரேயஸ் ஐயர் தேர்வும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. காரணம் அவர் காயம் காரணமாக சில தொடர்களில் விளையாடாத நிலையில், நேரடியாக பெரிய போட்டியில் 4 வது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டு உள்ளார்.

அதே நேரம் சஞ்சு சாம்சனை அவருக்கு பதிலாக சேர்த்து இருந்தால் இன்று அவரால் நிதானமாக ஆடி இருக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முஹம்மது ஷமியை சேர்க்காததும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பும்ராவின் வருகையும்,
முஹம்மது சிராஜும் அணிக்கு வலு சேர்த்தாலும் ஷமி போன்ற நெருக்கடியான சமயங்களில் அணிக்கு உதவக்கூடியவரை பெஞ்சில் அமர வைத்துவிட்டு ஆல்ரவுண்டர் என்று சொல்லி ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு அளித்து இருக்கிறார்.

ஷர்துல் தாக்கூர் சில நேரங்களில் பேட்டிங் மூலம் இந்திய அணிக்கு உதவியுள்ளார் என்றால் பந்துவீச்சில் அவர் ரன்களை வாரி வழங்கிவிடுவார். ஆனால், இந்திய அணியின் வெற்றிக்கு பல தருணங்களில் உதவியிருக்கும் நம்பிக்கையான ஆல் ரவுண்டர் அக்‌ஷர் பட்டேலையும் பெஞ்சில் அமர வைத்துவிட்டு குல்தீப் யாதவை சேர்த்துள்ளார்கள். அக்‌ஷர் பட்டேலும் இடது கை சுழற்பந்து வீச்சாளர்தான்.

குல்தீப் யாதவ் அளவுக்கு அக்‌ஷர் பட்டேல் சுழல் இருக்காது என்றாலும் ஷர்துலை நம்பிக்கையான ஆல்ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல்தான். தற்போது அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுகளை இழந்துவரும் நிலையில் அக்‌ஷர் பட்டேல் கூடுதல் நம்பிக்கையாக அணிக்கு இருந்திருப்பார். இன்றைய போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்த 2 பேருமே வேகப்பந்து வீச்சாளர்கள்தான்.

விக்கெட் எடுக்காத நசீம் ஷாவும் சிறப்பான ஸ்விங் பந்துவீச்சை வெளிப்படுத்தி குறைவான ரன்களையே கொடுத்திருந்தார். இப்படிப்பட்டு ஆடுகளத்தில் முஹம்மது ஷமி இருந்திருந்தால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை மிரட்டி இருப்பார். இப்படி சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல், முஹம்மது ஷமி, அர்ஷ்தீப் என தங்க முட்டையிடும் வாத்துகளை விட்டுவிட்டு விடியலை தேடுகிறது பிசிசிஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+