அண்ணனை நம்பி அரசியல் அனாதைகளான திமுக உடன்பிறப்புகள்..அள்ளி அரவணைக்கும் பாஜக.. பரபர தென்மாவட்டம்
சென்னை: மதுரைக்கார அரசியல் அண்ணனை மலையாக நம்பி காத்திருந்த திமுக உடன்பிறப்புகள் எங்கே செல்லும் இந்த பாதை என தெரியாமல் தத்தளித்து வருகின்றனர். தாய் கழகம் திமுக மீண்டும் அரவணைக்காத் நிலையில் வேறுவழியே இல்லாமல் பாஜக பக்கம் கொத்து கொத்தாக போக தயாராகி வருகின்றனராம் அண்ணன் ஆதரவாளர்கள்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தது முதலே திமுகவுக்கு மீண்டும் வருவார் மு.க. அழகிரி என்பது பேச்சாக இருந்தது. அழகிரியும் தம் பங்குக்கு கூட்டம் சேர்த்து தமக்கும் மாஸ் இருக்கிறது என காட்ட நினைத்தார். ஆனால் அழகிரிக்கு முன்பு இருந்த ஆதரவு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிப் போனது.

ரஜினியும் அழகிரியும்
பின்னர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்; அவருடன் கூட்டணி சேர்ந்து ஒரு ஆட்டம் ஆடலாம் என கணக்குப் போட்டு காத்திருந்தார் அழகிரி. இதற்காக தமது ஆதரவாளர்களை எல்லாம் கூட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது அழகிரி தனிக்கட்சி தொடங்குவார்; அந்த கட்சி ரஜினியோடு கூட்டணி சேரும் என கூறப்பட்டது ஆனால் அத்தனையும் நான் அரசியலுக்கே வரலை.. ஆளை விடுங்கப்பா எனும் அறிவிப்பில் தவிடு பொடியாக்கிவிட்டார் ரஜினிகாந்த்.

அமைதியான அழகிரி
சட்டசபை தேர்தலின் போதும் அழகிரியை அரவணைக்கும் நடவடிக்கைகளை திமுக தலைமை மேற்கொள்ளும் என கூறப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. சட்டசபை தேர்தலில் திமுக வென்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது. தமிழக முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பதவியேற்றார். அப்போதிருந்தே அழகிரியின் ஆவேசம் அடங்கிப் போய் அன்பு பாசம் பீறிட்டு கொட்டியது. இதனால் முரசொலியில் கூட அழகிரியின் வாழ்த்துகள் இடம்பிடித்தன. அன்றோடு ஓய்ந்து போனது அழகிரியின் திமுக தலைமை எதிர்ப்பு வேகம்.

ஒதுங்கி கொள்ளும் அழகிரி
ஆனாலும் கூட அழகிரியை நம்பி திமுகவின் பல்வேறு பொறுப்புகளை தூக்கிப் போட்டு அண்ணன் ஏதாச்சும் செய்வார் என இலவு காத்து கிடந்த தொண்டர்கள் தொடர்ந்து நம்பி வந்தனர். இருந்தாலும் அண்ணன் அழகிரி எதுவுமே செய்யாத நிலையில் தற்போது தங்களிடம் இருந்து மெல்ல மெல்ல விலகத் தொடங்கியிருப்பதையும் உணர தொடங்கிவிட்டனர். பொதுவாக தங்களது வீட்டு நிகழ்ச்சிக்கு அழகிரி அல்லது அழகிரி குடும்பத்தாரை அவரது ஆதரவாளர்கள் அழைப்பது வழக்கம். ஆனால் இப்போது இது போன்ற நினைப்புடன் அழகிரி வீட்டுக்கு போன் செய்தாலோ, நேரில் போனாலோ, எங்கப்பா உடம்பு சரியில்லை... அதனால் அமைதியாக இருக்கேன்.. அண்ணி எல்லாம் எதுக்கு அவ்வளவு தூரம்.. நீயே இருந்து எல்லாம் பாரு என தட்டி கழிக்கிறாராம் அழகிரி. இதனால் அழகிரிக்கு வலதும் இடதுமாக இருப்பவர்கள் கூட அதிர்ந்து போய் இருக்கின்றனர்.

புறக்கணிப்பும் பாஜகவும்
மதுரையில் கோலோச்சி, அழகிரியை நம்பி அரசியலை தொலைத்த தம்பதியினர் அண்மையில் தென்பாண்டி அமைச்சர் ஒருவருக்கு தூது விட்டனர்; நேரில் போயும் பார்த்தனர். ஆனால் அந்த அமைச்சரோ, ஆகட்டும் பார்க்கலாம் என ஒரு சராசரி தொண்டனாக கூட மதிக்காமல் அனுப்பிவைத்துவிட்டாராம். இதனால் திமுகவுக்கு இனி போய் அவமானப்படுவதை காட்டிலும் வேறு ஒரு கட்சிக்கு போய் ஏதேனும் ஒரு பதவியை வாங்கி காலத்தை ஓட்டலாம் என நினைக்கின்றனராம் அழகிரி ஆதரவாளர்கள். அப்படி எந்த கட்சிக்குப் போவது? என்கிற ஆலோசனையில் கொள்கையோ கூப்பாடோ, பொழப்பை பார்க்க பாஜக பக்கம் போகலாம்; காவி கட்டி கட்டலாம் என கங்கணம் கட்டுகின்றனராம் சீனியர் அழகிரி ஆதரவாளர்கள்.

Click it and Unblock the Notifications