திமுகவில் அதிருப்தியாளர்களை அணி திரட்ட களமிறங்கும் மு.க. அழகிரி
சென்னை: திமுகவில் அதிருப்தியாளர்களை அணி திரட்ட விரைவில் மாவட்டம் தோறும் மு.க. அழகிரி சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.
கருணாநிதி மறைந்த உடன் திமுகவுக்குள் மீண்டும் நுழைய மு.க. அழகிரி முயற்சிகளை மேற்கொண்டார். குறைந்தபட்சம் திமுகவின் அறக்கட்டளைகளில் ஒன்றில் மகனுக்கு பொறுப்பு வாங்கிவிடலாம் என முயற்சித்தார்.

ஆனால் ஸ்டாலின் தரப்பில் இருந்து சிக்னல் கிடைக்கவே இல்லை. கருணாநிதி நினைவிடம் நோக்கி தமது பலத்தை நிரூபிக்க முயற்சித்தார் அழகிரி. இருப்பினும் திமுகவில் அவர் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான எந்த சமிக்ஞையும் காட்டப்படவில்லை.
இதனால் அழகிரி மிகவும் அதிருப்தி அடைந்தார். மேலும் அழகிரி ஆதரவாளர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்களும் வழங்கப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டனர். அதேநேரத்தில் அழகிரி எந்த ஒரு அரசியல் நடவடிக்கையையும் வெளிப்படுத்தாமல் இருந்தார்.
லோக்சபா தேர்தலின் போது தமது ஆதரவாளர்களை தினகரன் கட்சிக்கு வாக்களிக்க உத்தரவிட்டார். மேலும் நடிகர் ரஜினிகாந்துடன் தொடர்ந்தும் அழகிரி ஆலோசனை நடத்தி வந்தார்.
ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கும் போது அதில் அழகிரி தமது ஆதரவாளர்களுடன் இணைவார் என்றே கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக தமது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள அழகிரி திட்டமிட்டுள்ளாராம்.
இந்த சுற்று பயணத்தின் போது, ரஜினிகாந்துடன் இணைவது தொடர்பாக ஆதரவாளர்கள் கருத்தை அழகிரி கேட்க திட்டமிட்டிருக்கிறாராம்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications