திமுக - காங்., பிரச்சனை ஓவர்.. ராகுலுக்கு போன் போட்டு பேசிய ஸ்டாலின்.. ஒன்றிணைத்து வைத்த பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: சகோதரர்கள் என மாறி மாறி அன்பை பரிமாறி வந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இடையேயான உறவில் விரிசல் விழுந்ததாக தகவல்கள் வெளியாகின. இருவரும் சந்திப்பபை தவிர்த்து பேசுவதை தவிர்த்து வந்த நிலையில் இருவருக்கும் இடையேயான மனக்கசப்பு தற்போது சரியாகி உள்ளது. குறிப்பாக பாஜக செய்த ஒரு செயலால் ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.

ராகுல் காந்திக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. சகோதரர்கள் என இருவரும் மாறி மாறி அன்பை பொழிந்து வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இருவரும் சமீபத்தில் பேசி கொள்ளவில்லை. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் பிரச்சனை வந்தது தான் இதற்கு காரணமாகும்.

mk-stalin-calls-rahul-gandhi-after-months-of-political-silence-due-to-union-government-delimitation

தவெக பக்கம் காங்கிரஸ் செல்லும் என்று கூறப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணியிலேயே காங்கிரஸை தக்கவைத்தது. கடந்த முறையை விட 3 தொகுதிகள் கூடுதலாக வழங்கி 28 சீட்டுகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக வழங்கி உள்ளது. இருப்பினும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகத்தில் பிரசாரத்துக்கு வரவில்லை.

ஸ்டாலின் - ராகுல் மனக்கசப்பு?

இதற்கு கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக தங்களை நடத்திய விதம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி பிரச்சனைகளால் ராகுல் காந்தி அப்செட்டில் இருப்பது தான் காரணம் என்று கூறப்பட்டது. மேலும் புதுச்சேரியில் ஒரே நாளில் ராகுல் காந்தி, ஸ்டாலின் பிரசாரம் செய்தாலும் சந்தித்து பேசவில்லை. ஒன்றாக பரப்புரை மேற்கொள்ளவில்லை. இதனால் ஸ்டாலின் - ராகுல் காந்தி இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ராகுல் - ஸ்டாலின் பேச்சு

இந்நிலையில் தான் நேற்று முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் கூட இருவரும் பேசாத நிலையில் நேற்று திடீரென்று ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதனால் காங்கிரஸ் - திமுக தலைமை இடையேயான மனக்சப்பு மறைந்துள்ளது.

பாஜக தான் காரணம்

ஸ்டாலினின் இந்த செயலுக்கு முக்கிய காரணம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதா தான். இந்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்கு ராகுல் காந்தி தான் தலைமை தாங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதன்மூலம் ராகுல் காந்தி - ஸ்டாலின் ஆகியோர் பிரிந்து இருந்த நிலையில் இருவரையும் மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரயைரை மசோதா ஒன்றிணைத்துள்ளது.

நாளை ராகுல் காந்தி பிரசாரம்

இதற்கிடையே தான் ராகுல் காந்தி நாளை தமிழ்நாட்டில் பிரசாரம் செய்கிறார். டெல்லியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் ராகுல் காந்தி சென்னைக்கு 11.10 மணிக்கு வருகிறார். பிறகு அவர் ஹெலிகாப்டரில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டசபை தொகுதிக்கு செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பளர் துரைச்சந்திர சேகருக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இருப்பினும் இந்த பிரசாரத்தில் ஸ்டாலின் பங்கேற்பது இல்லை. ஸ்டாலினின் பிரசார திட்டங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதால் ராகுல் காந்தியும் - ஸ்டாலினும் ஒன்றாக பிரசாரம் செய்வது இல்லை என்று திமுகவின் ஆர்எஸ் பாரதி இன்று உறுதிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+