ஸ்டாலின் அறிவித்த "1000 ரூபாய்".. பெண்களுக்கு கிடைக்காதா?.. அமைச்சரே வெளியிட்ட பரபரப்பு பேட்டி
ஸ்டாலின் அறிவித்த 1000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: தமிழகமே ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று திமுக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
திமுகவின் வாக்குறுதியில் தெரிவித்திருந்த இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகி வருகிறது.
இப்படி ஒரு வாக்குறுதியை தந்ததுமே அது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், இது நிறைவேற்ற சாத்தியப்படுமா? என்ற கேள்வியும் எழுந்தது.

அதிமுக
காரணம், கஜானாவை காலி செய்துவைத்துவிட்டு போயிருந்தது அதிமுக அரசு.. இதுபோக, லாக் டவுன் நேரம்.. அரசின் வருமானம் வரும் வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. அதையும் மீறிதான் பல திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டதை மறுக்க முடியாது. தொற்று குறைந்த நிலையில், லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில், 1000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற ஆர்வம் பெருகியது. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இல்லை..

உள்ளாட்சி தேர்தல்
அதனால், எப்படி பார்த்தாலும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர உள்ளதால், அந்த தேர்தலுக்குள், கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளது என்றும் நம்பப்பட்டது. இதனிடையே, அதிமுக இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தி வருகிறது.. இந்த விவகாரம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான "நமது அம்மா"விலும் வெளியானது..

இல்லத்தரசிகள்
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல், அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதுதான் சொல்வது ஒன்று. செய்வது வேறொன்று என்பதோ? என்று கேள்வி எழுப்பியிருந்தது...

அர்ச்சகர்
அதாவது அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்பது குறைவான எண்ணிக்கையில் அர்ச்சகர்களை கொண்டு தங்களின் தேர்தல் வாக்குறுதி மோசடியை வேறுபக்கம் திசை திருப்பும் காரியமே ஆகும் என்று விமர்சித்தது. அதுமட்டுமல்லாமல், எதிர்க்கட்சி தலைவர் எங்கு சென்றாலும், எங்கு பேசினாலும், பொய் வாக்குறுதிகள் என்று திமுகவை இதே விஷயத்தில் சாடியும் வருகிறார்..

வாக்கு சேகரிப்பு
எனினும், ஆட்சி இன்னும் 5 வருடங்கள் உள்ள நிலையில், அதற்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேங்கடாபுரம், குருவன்மேடு, ஆப்பூர், ரெட்டிப்பாளையம், ஆத்தூர் வேம்பாக்கம் பகுதிகளில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

3 மாதங்கள்
அப்போது அவர் பேசும்போது, "பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கப்படவில்லையே என்று கேட்கின்றனர்... கடந்த ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். அதனைச் சரி செய்யும் பணியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். அதனால் தான் மகளிர் உரிமை தொகையை வழங்க முடியவில்லை... ஒருமாதத்துக்கோ, அல்லது 2 மாதங்களுக்கோ என்றால் உடனே வழங்கிவிடலாம்... ஆனால் காலத்துக்கும் வழங்கக்கூடிய திட்டம் இது. அதனால் இதனை செயல்படுத்துவதற்காக கணக்கெடுக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. எனவே, இன்னும் 3 மாதத்தில் உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கப்படும்" என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications