புதிய சொகுசு காரில் அசத்தலாக வந்த முதல்வர் ஸ்டாலின்! மோஸ்ட் வாண்டட் டொயோட்டா லேண்ட் க்ரூசர்
சென்னை: திமுக தலைவராக பதவியேற்று 5 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.5 கோடி மதிப்பு கொண்ட டொயோட்டா லேண்ட் க்ரூசர் எல்.சி. 300 என்ற சொகுசு காரில் நேற்று வந்தார்.
BMW, பென்ஸ், லேண்ட் ரோவர், ஆடி, ஜேகுவார் என பன்னாட்டு சொகுசு கார்களின் மீது ஆர்வமாக இருந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்த்து இருக்கிறது டொயோட்டா நிறுவனத்தின் லேண்ட் க்ரூசர் எல்.சி. 300 என்ற கார்.
ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா, ஃபார்சுனர் போன்ற பல லட்சம் மதிப்பிலான கார்கள் விற்பனை ஒரு பக்கம் பட்டையை கிளப்பி வரும் சூழலில், கோடீஸ்வரர்கள் விரும்பும் காராக மாறி இருக்கிறது லேண்ட் க்ரூசர்.

குறைவான உற்பத்தி
கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த லேண்ட் க்ரூசர் கார் எல்.சி. 300 கார் குறைவான அளவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள், தோற்றத்தை கண்டு பலரும் இதை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், குறைவான கார்களே விற்பனைக்கு வந்ததால் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது.

பிரம்மாண்ட தோற்றம்
சென்னையில் 5 லேண்ட் க்ரூசர் கார்கள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில் அதில் ஒரு காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட தோற்றத்தை கொண்ட இந்த லேண்ட் க்ரூசர் காரில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்ததை கண்ட அவரது தொண்டர்கள் வாயடைத்து போய்விட்டார்களாம். அந்த அளவுக்கு அதன் தோற்றம் இருக்கிறது.

கவனம் ஈர்த்த கார்
ஆனால், இந்த கார் விற்பனைக்கு வந்தவுடனே நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இதை வாங்கிவிட்டார். குறைவான எண்ணிக்கையிலேயே வெளியிடப்பட்டு இருக்கும் இந்த காரை வாங்கியே தீர வேண்டும் என்ற ஆசையில் தொழிலதிபர்கள், சினிமா, அரசியல் பிரபலங்கள் என பலரும் டொயோட்டாவை அணுகி இருக்கிறார்கள்.

ஸ்டாலினின் டிஃபெண்டர்
ஆனால், டொயோட்டா நிறுவனம் தற்போதுதான் முன் பதிவையே தொடங்கியுள்ளதாம். ரூ.10 லட்சம் கொடுத்து இந்த காருக்காக பலர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 கோடி மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கி தனிப்பட்ட மற்றும் பொது தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..!












Click it and Unblock the Notifications