ஸ்டாலின் பலவீனமானவர்.. திமுக பெரும்பான்மை பெறாவிட்டால் ஆட்சியில் பங்கு உறுதி- துக்ளக் குருமூர்த்தி
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பலவீனமான தலைவர்; தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனால் கூட்டணி ஆட்சி.. ஆட்சியில் பங்கு கொடுத்துதான் ஆக வேண்டிய நிலைமை உருவாகும் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தலை அன்றே ஆதரித்தவர் கருணாநிதிதான் எனவும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 55-வது ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இதனை பாஜக கொண்டு வருகிறது என்பதற்காகவே எதிர்ப்பு தேவையாக இருக்கிறது. இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல்தான் நடந்து கொண்டிருந்தது. 1971-ல்தான் இந்த முறை மாறியது. அப்போதுகூட ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்தவர் கருணாநிதிதான்.. தேசியத் தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்; தனியாக தேர்தல் நடத்த வேண்டும்; தனித்தனியாக தேர்தல் நடந்தால் செலவாகும் என்று சொன்னவரே கருணாநிதிதான். இதை மக்கள் மறந்துவிட்டனர். இது சாத்தியமா? இல்லையா? என்பதை இன்றைக்கு கூற முடியாது.

ஆட்சியில் பங்கு தர மறுத்த கருணாநிதி
திமுக பெரிய வெற்றி பெறும்போது அதிகாரத்தில் யாருக்கும் பங்கு கொடுக்கமாட்டார்கள். 2006-ல் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை வரவில்லை. அந்த சமயத்தில் திமுகவின் கையை முறுக்கி அதில் சேர வேண்டும் என முயற்சித்த கட்சிகளால் சேர முடியவில்லை. அதற்கு காரணம் கருணாநிதி போன்ற பெரிய தலைவர் இருந்ததால்தான்.
ஆட்சியில் பங்குதர வேண்டிய நிலையில் ஸ்டாலின்
ஸ்டாலின் மாதிரி ஒரு பலவீனமான தலைவர் இருந்து, திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனால் நிச்சயமாக ஆட்சியில் பங்கு கொடுத்துதான் ஆக வேண்டும். அதனால் தேர்தல் முடிவு எப்படி இருக்கிறதோ அப்படித்தான் ஆட்சியில் பங்கு என்பது வரும். இவ்வாறு துக்ளக் குருமூர்த்தி கூறினார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications