வேலூரில் கதிர்ஆனந்தை வெல்ல வைப்பது எப்படி? ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடந்தது.
பண விநியாக முறைகேடு புகார் காரணமாக வேலூர் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையத்தால் ரத்து ஆனது. இந்நிலையில் வேலூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகமும், திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும் போட்டிடுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த சூழலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஜெயிக்க வைக்க தேவையான தேர்தல் யுக்திகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்காக திமுக நிர்வாகிகளின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக யுக்திகளும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதேபோல் எதிர் அணியின் வியூகங்களை முறியடிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அன்பகத்தில்...
திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுவாக அண்ணா அறிவாலயத்தில்தான் நடைபெறும். திமுக இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் இருந்த போதும் கூட அறிவாலயத்தில்தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தற்போது மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் அன்பகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications