திடீர் திருப்பம்.. திருவாரூர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக களமிறங்குகிறார் ஸ்டாலின்?
Recommended Video

சென்னை: இடைத் தேர்தலை சந்திக்க உள்ள திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மு.க.ஸ்டாலினை களமிறக்கச் செய்ய அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 28ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, திமுக சார்பில் விருப்ப மனு வினியோகம் இன்று ஆரம்பித்ததுள்ளது. வரும் 4ம் தேதி, வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது.

திடீர் திருப்பம்
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரான பூண்டி கலைவாணன் இத்தொகுதியில் அக்கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டது. இந்த நிலையில்தான், திடீர் திருப்பமாக திமுக தலைவர் ஸ்டாலினை, திருவாரூர் தொகுதியில் போட்டியிட வைக்க முயற்சி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டி.ஆர்.பாலு, திமுக கொறடா, சக்கரபாணி போன்ற முன்னணி தலைவர்கள், திருவாரூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துவோரில் முக்கியமானவர்கள்.

கருணாநிதி வாரிசு
திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, ஸ்டாலினை, டி.ஆர்.பாலு சந்தித்து தனது யோசனையை முன் வைத்ததாகவும், திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஸ்டாலினோ இப்படி தான் யோசிக்கவேயில்லை என்றும், தலைவர்கள் கருத்துக்களை பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளாராம். கருணாநிதி வகித்த தொகுதியில், ஸ்டாலின் போட்டியிடுவது அவரது வழித்தோன்றல் என்பதை நிரூபிக்கும் வகையில் அமையும் என்பதுதான் திமுக மூத்த நிர்வாகிகள் வற்புறுத்தலுக்கு காரணமாம்.

எதிர் கருத்து
திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனும்கூட, ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆதரவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ள ஸ்டாலின், அதைவிட்டுவிட்டு திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிட அவசியம் இல்லை என்ற ஒரு கருத்தும் கட்சிக்குள் சிலரால் முன் வைக்கப்படுகிறது.

திமுகவின் வியூகம்
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் திருவாரூர் இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆர்.கே.நகர் போல தோல்வியை சந்தித்தால், லோக்சபா தேர்தலில் திமுக தொண்டர்கள் மனரீதியாக மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பார்கள் என்பதால், வேறு வழியின்றி, திருவாரூரில் ஸ்டாலினே களமிறங்கிவிடலாம் என்ற யோசனை உள்ளதாம். ஒருவேளை, அழகிரி சுயேச்சையாக களமிறங்கினால் ஸ்டாலின் திமுக வேட்பாளராகக்கூடும். அல்லது பூண்டி கலைவாணனுக்குதான் வாய்ப்பு என்கிறார்கள் விவரம் அறிந்தோர்கள். ஏனெனில் திமுக ஓட்டுக்களை அழகிரி பிரித்துவிட்டால், அது திமுகவிற்கு பாதகமாகிவிடும். லோக்சபா தேர்தலில் திமுவின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய திரூவாரூர் அக்னி பரிட்சை போன்றது என்பதால் இந்த திட்டத்தில் உள்ளனராம். திமுகவில் நடக்கும் இந்த அதிரடி வியூகங்களால் திருவாரூர் தேர்தல் களை கட்ட ஆரம்பித்துள்ளது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications