மதவாத கண்ணாடி அணிந்து பார்க்காதீர்கள் : டெல்லி பல்கலை நிர்வாகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை : "எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் - மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியலின எழுத்தாளர்களின் படைப்புகள், டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்களான பாமாவின் "சங்கதி" மற்றும் சுகிர்தராணியின் "கைம்மாறு என்னுடல்" படைப்புகள் மற்றும் மகாஸ்வேதா தேவியின் சிறுகதையான "திரௌபதி" ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.

சுல்தானாவின் கனவு
நேற்று நடந்த பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதில் சுல்தானாவின் கனவு என்ற புத்தகமும், ராமாபாயின் படைப்புகளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

விளிம்புநிலை மக்கள் குரல்
இதனிடையே டெல்லி பல்கலைக்கழகம் ஆங்கில இலக்கியத் துறையில் இருந்து தமிழ் படைப்புகள் நீக்கப்பட்டடுள்ளது குறித்து பல்கலைக்கழகத்தில் இருந்து முறையான முன்னறிவிப்பு எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞர் சுகிர்தராணி, ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் குரலாகதான் எங்களின் குரல் இருக்கிறது. இந்தக் குரல்களை நசுக்குகின்ற செயலாகத்தான் இந்நிகழ்வை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். பலரும் டெல்லி பல்கலைக்கழகத்தின் செயலை கண்டித்துள்ளனர். மீண்டும் தமிழ எழுத்தாளர்களின் படைப்புகளை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஒருதலைபட்சமான முடிவு
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமா அவர்களின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணி அவர்களின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலேயே மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைப்பட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.

மதவாதக் கண்ணாடி
பெண்கள் உரிமை - ஒடுக்கப்பட்டோர் விடுதலை - மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் - மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் ஒன்றிய அரசையும் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications