எதையுமே நிறைவேற்றாத பாஜக ஆட்சி.. 2024 லோக்சபா தேர்தலில் ஏமாந்து விடாதீர்கள்.. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: 2014ஆம் ஆண்டு ஏமாந்தது போல, 2019ஆம் ஆண்டு ஏமாந்தது போல 2024ஆம் ஆண்டும் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் தனது இந்தியாவுக்காகப் பேசுகிறோம்' பாட்காஸ்ட் பதிவில் வேண்டுகோள் வைத்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்கட்சியினர் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி என்று பெயர் வைத்துள்ளனர். 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டணியில் முதல் 2 ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க மும்பை செல்லும் முன்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவருடைய எக்ஸ் பக்கத்தில் 'ஆரம்பிக்கலாமா வணக்கம்... என்று கூறி தொடங்கிய வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில் 2024ஆம் முடியப் போற பாஜக ஆட்சி இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்கிறது; எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகின்ற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு ஆடியோ சீரியஸில் பேசப் போகிறேன். அதற்கு 'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' என்ற தலைப்பு வச்சுக்கலாமா? தெற்கிலிருந்து வரும் இந்தக் குரலுக்காகக் காத்திருங்கள் என்று கூறியிருந்தார்.
அதன்படி முதல் சீரிஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசி பதிவிடப்பட்டிருந்தது. இன்றைய தினம் இரண்டாவது சீரிஸ் முதல்வர் ஸ்டாலினின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்காக பேசுவோம் என்று தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் திமுகவின் சாதனைகளை தெரிவித்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்ட உடன் சமூக வலைத்தளங்களில் வந்த பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
எங்கள் முதல்வர் சொன்ன 1000 ரூபாய் வந்தாச்சு.. உங்க பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு என்று பதிவிட்டது வைரலாகி விட்டது. நம்முடைய நாடும் நாட்டு மக்களும் மீண்டும் பாஜகவிடம் ஏமாந்து விடக்கூடாது என்றுதான் இந்த பாட்காஸ்ட் சீரிஸ் தொடங்கியுள்ளேன்.
2014ஆம் ஆண்டு ஏமாந்தது போல, 2019ஆம் ஆண்டு ஏமாந்தது போல 2024ஆம் ஆண்டும் மக்கள் ஏமாந்து விடக்கூடாது. குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அங்கு தேனாறும் பாலாறும் ஓடுவது போல பொய் செய்திகளை பரப்பி மக்களை ஏமாற்றி பாஜக ஆட்சி வந்தது. எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள் நாட்டை வளர்ச்சி அடைய வைக்கிறோம் என்று சொன்னார் மோடி. அவருக்கு கூடுதலாக அடுத்த 60 மாதங்களும் மக்கள் கொடுத்து விட்டனர்.

வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றி விட்டாரா என்று மோடி பதில் சொல்ல வேண்டும். எந்த வகையில் எல்லாம் இந்தியாவை வளர்த்திருக்கிறார் என்று பட்டியல் போட முடியுமா? 5 டி தான் எனக்கு முக்கியம் என்று மோடி சொன்னார். திறமை, வர்த்தகம், பாரம்பரியம், டூரிசம், டெக்னாலஜிதான் முக்கியம் என்றார். இதில் ஒன்றாவது நிறைவேற்றியுள்ளாரா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னைப்பொருத்தவரைக்கும் பாஜக ஆட்சி 5 C கொண்டதாகத்தான் உள்ளது. கம்யூனலிசம், கரப்சன், கார்ப்பரேட் கேப்டலிசம், சீட்டிங், கேரக்டர் அசாசினேசன் ஆகிய 5 C க்கள் கொண்ட ஆட்சியாக பாஜக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications