குப்புச்சிப்பாளையம் ரோட்டில்.. அப்படியே "மிரண்டு" போய்ட்டாராமே ஸ்டாலின்.. காரணம் செந்தில் பாலாஜிதான்
செந்தில்பாலாஜியை முக ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்
சென்னை: கரூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.. அதற்கு காரணம் எம்எல்ஏ செந்தில்பாலாஜிதான்!
செந்தில்பாலாஜியை பொறுத்தவரை எல்லா கட்சிகளுக்கும் போய்விட்டார் என்ற ஒரு பெயர் இருக்கிறது.. அதேசமயம், அவர் எந்த கட்சியில் இருந்தாலும் அங்கு சூப்பர் விஐபியாகவே கருதப்பட்டு வருகிறார்.

அந்த வகையில்,இப்போதைக்கு திமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.. அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு டஃப் தந்து வருகிறார்... பந்தயம் கட்டறேன், முடிந்தால் என்னை ஜெயித்து பார் என்று சவால் விடுத்து வருகிறார்.
Recommended Video

இப்படிப்பட்ட சூழலில்தான் கரூருக்கு திமுக தலைவர் வந்திருந்தார்.. கிராம சபை கூட்டத்தை இங்கு நடத்த போவதாக சொன்னதுமே, ஒவ்வொரு பகுதிகளிலும் ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுக்க, எம்எல்ஏ செந்தில் பாலாஜி, பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டார் என்றார்கள்.
அதன்படியே அந்த வரவேற்புகளை பார்த்து ஸ்டாலின் அப்படியே ஷாக் ஆகிவிட்டாராம்.. குறிப்பாக குப்புச்சிபாளையத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின், செந்தில் பாலாஜியை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளிவிட்டாராம்.. இதற்கு காரணம், அதுவரை பங்கேற்ற கூட்டங்களில் இல்லாத அளவுக்கு கூட்டம் கரூரில்தான் குவிந்திருந்ததாம்.
அதனால்தான் உணர்ச்சிவசப்பட்ட ஸ்டாலின், "செந்தில்பாலாஜி கட்சியில் வந்து சேர்ந்தபோது, எந்த உணர்வோடு சேர்ந்தாரோ, நான் எந்த உணர்வோடு அவரை இந்தக் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேனோ, அதைவிட பல மடங்கு இப்பொழுது செயல்பட்டு கொண்டிருக்கிறார்... அவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், "கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை" என்பார்களே அதுபோலத்தான், அவரை பற்றி தெரிந்து வைத்திருக்கிற உங்களிடத்தில், அவரைப்பற்றியே அதிகம் பேச வேண்டிய அவசியம் இல்லை..
நான் இப்போ வரும் வழியில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது... நான் தங்கியிருந்த
இடத்திலிருந்து இங்கு 15 நிமிஷத்தில் வந்துவிடலாம்.. ஆனால், எனக்கு இங்கே வந்து சேர கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகியிருக்கிறது.. அந்த அளவிற்கு வழியெல்லாம் மிகச் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி
இருந்தது" என்றார்.
இதையெல்லாம் கேட்ட உடன்பிறப்புகளோ, அப்போ செந்தில் பாலாஜிக்கு இந்த முறையும் சீட் கன்பர்ம்ட் என்று பூரித்து போய் சொல்கிறார்கள்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக












Click it and Unblock the Notifications