திருவாரூரில் ஸ்டாலின் போட்டியிட விருப்பமா? மா.செ. பூண்டி கலைவாணன் பதில் இதுதான்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திருவாரூர் இடைத்தேர்தல் பற்றி பூண்டி கலைவாணன்

    சென்னை: திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட விரும்பவில்லை என்று, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்தார்.

    திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை இன்று அறிவாலயத்தில் சந்தித்து பேசினார் பூண்டி கலைவாணன்.

    MK Stalin refused the idea of contesting in the Thiruvarur by election

    பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த தேர்தலில், கருணாநிதி தமிழகத்திலேயே, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி திருவாரூர். எனவே அங்கே திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே கட்சியினர் ஆசை. எனவே, ஸ்டாலின் பெயரில் நான் விருப்ப மனு வழங்கினேன்.

    ஆனால், திருவாரூர் தொகுதியில் இப்போது தான் போட்டியிட விரும்பவில்லை என்று ஸ்டாலின் கூறினார். அதேநேரம் உதயநிதி ஸ்டாலின் இத்தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி அவர் ரசிகர் மன்றத்தினரும் விருப்பமனு வழங்கியுள்ளனர்.

    MK Stalin refused the idea of contesting in the Thiruvarur by election

    என்னையும் விருப்ப மனு தாக்கல் செய்ய ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அவர் கோரிக்கையை ஏற்று, எனது பெயரிலும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். நாளை, 4ம் தேதி, திமுக வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும். எனக்கு வாய்ப்பு கொடுத்தால், ஏற்றுக்கொள்வேன். இவ்வாறு பூண்டி கலைவாணன் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+