சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பரவல்... உயிர்களுடன் விளையாடுகிறது அரசு... மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மரண எண்ணிக்கையை குறைத்துக்காட்டும் வகையிலேயே அரசு அறிவிப்பு வெளியிட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், மரணக் கணக்கில் உள்ள தவறுகளைத் திருத்துவதற்காக ஏற்கனவே 39 கமிட்டிகள் அமைக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு புதிய கமிட்டி ஏன் அமைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்

ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஸ்டாலின் குற்றச்சாட்டு

தொலைநோக்குப் பார்வை இல்லாமலும் நிர்வாகத் தவறுகளாலும் கொரோனா பரவத் தொடங்கிய நாட்களிலிருந்து தற்போது பெரிய அளவில் பரவியுள்ள நிலையில் இலட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு. அடுத்தவர் மீது பழி போட்டுத் தப்பிப்பது, அக்கறையற்ற அணுகுமுறை, தவறான செயல்பாடுகள் என ஒவ்வொரு நாளும் மேற்கொண்ட மோசமான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டன.

ஸ்டாலின் சந்தேகம்

ஸ்டாலின் சந்தேகம்

பல அடுக்கு நிர்வாகக் கட்டமைப்பும் போதுமான தகவல் வளங்களும் கொண்டு, களநிலவரத்தை நன்கு கண்காணிக்கும் வாய்ப்பு கொண்டது சென்னை மாவட்டம். இத்தகை உறுதியான கட்டமைப்பு இருந்தும்கூட, 63% மரணங்களை அ.தி.மு.க அரசு மறைத்து மோசடி செய்ய முடிந்திருக்கிறது என்றால், இந்த அளவுக்கு நிர்வாகக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

விசாரணைக் கமிட்டி

விசாரணைக் கமிட்டி

மறைக்கப்பட்ட மரண எண்ணிக்கை தொடர்பான விசாரணைக் கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையில் இதுநாள்வரையில், 63% மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது எனக்கொண்டால், தமிழ்நாட்டில் கொரோனா மரண விகிதம் என்பது 3.66% ஆகும். சென்னையில் மட்டும் அது 4.47% என்ற அளவில் இருப்பதையும் அறிய முடியும். முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் அதிகாரிகளும் காட்டுகிற மரண விகிதத்திற்கும் உண்மையான மரண விகிதத்திற்குமான வேறுபாடு பெரிய அளவில் உள்ளது.

39 கமிட்டிகள்

39 கமிட்டிகள்

ஜூலை 22 அன்று, மரண எண்ணிக்கையில் இனியும் தவறுகள் நேராமல் இருப்பதற்காக மாநில அளவிலான கமிட்டி அமைப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மரணக் கணக்கில் உள்ள தவறுகளைத் திருத்துவதற்காக ஏற்கனவே 39 கமிட்டிகளை அமைப்பதாகச் சொல்லியிருந்த எடப்பாடி பழனிசாமி அரசு ஏன் புதிதாக ஒரு கமிட்டியை அமைக்கவேண்டும்?

எழும் கேள்விகள்

எழும் கேள்விகள்

ஜூலை 24 அன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், இனி தவறான கணக்கீடுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட - குறைந்த அளவிலான மரண எண்ணிக்கை கொண்ட அறிக்கைக்கு முரணாக மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எண்ணிக்கை வெளிப்படக்கூடாது என்பதற்கான மறைமுக எச்சரிக்கைதான் இந்த கடிதமா என்கிற கேள்வியும் எழுகிறது.

English summary
mk stalin says, in tamilnadu corona deaths are obscured
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X