சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 நிமிஷம் கிடைத்தால் கூட போதும்.. ஓடி வந்துருவேன்.. கொளத்தூரை நெகிழ வைத்த ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதி குறித்து மு.க.ஸ்டாலின் உணர்வுபூர்வமாக பேசினார்.

Google Oneindia Tamil News

சென்னை: "5 நிமிஷமோ அல்லது 10 நிமிஷமோ இல்லை, ஒரு அரை நாள் கிடைத்தால்கூட போதும்... உடனே கொளத்தூருக்கு ஓடிவந்து விடுவேன். இதை பார்த்த தலைவரும் 'ஏன்... கொளத்தூரை விடவே மாட்டியா?'என்று கேட்பார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தனது தொகுதியான கொளத்தூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஸ்டாலின். பிறகு மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றபோது, அதில் பங்கேற்று தனக்கும் கொளத்தூர் தொகுதிக்கும் உள்ள நெருக்கத்தை பற்றி மனம் விட்டு பேசினார். அப்போது ஸ்டாலின் தொகுதி பற்றி கூறியதாவது:

[நல்லா கவனிங்க.. இந்த நேரத்தில்தான் பட்டாசு வெடிக்கணும்.. "டைம் டேபிள்" வெளியிட்டது தமிழக அரசு!]

கருணாநிதி கேட்டார்

கருணாநிதி கேட்டார்

"என்னால் முடிந்த அளவு நான் இந்த தொகுதிக்கு பணிகளை செய்து தந்திருக்கிறேன். அதை நீங்களும் ஏற்று கொண்டிருக்கிறீர்கள். ஆயிரம் விளக்கு தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாக இருந்து பணியாற்றினேன். ஆனால் போன முறை இந்த தொகுதிக்கு மாறி வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதுபற்றி மறைந்த தலைவர் கருணாநிதி, என்னிடம் காரணம் கூட கேட்டார்.

ஆயிரம் விளக்கு தொகுதி

ஆயிரம் விளக்கு தொகுதி

அதற்கு நான், ஆயிரம் விளக்கு தொகுதியில் பல பணிகளை செய்து கொடுத்துவிட்டேன். கொளத்தூர் சட்டமன்ற தொகுதி புதுசாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த தொகுதி முன்னேற்றத்திற்கு நிறைய செய்ய வேண்டி உள்ளது. தமிழகம் முழுவதும் பல பணிகள் நான் சுற்றுப்பயணம் செய்தாலும், எப்போதெல்லாம் சென்னை வருகிறேனோ அப்போதெல்லாம் முதல் வேலையாக தொகுதி பக்கம் வருவதை வழக்கமாகவே வைத்திருக்கிறேன்.

5 நிமிஷம் கிடைத்தால் போதும்

5 நிமிஷம் கிடைத்தால் போதும்

இப்போது கூட அறிவாலயத்தில் பணி இருக்கிறது. கட்சியிலே பொறுப்பில் இருக்கக்கூடிய காரணத்தால் அந்தப் பணிகளும் இருக்கிறது. எவ்வளவோ பணிகள் இருந்தாலும் அந்த பணிகளுக்கு இடையில் 5 நிமிடமோ அல்லது 10 நிமிடமோ இல்லை, ஒரு அரை நாள் கிடைத்தால் போதும் உடனே கொளத்தூர் வந்து விடுவேன்.

இப்பதான் வருகிறாயா?

இப்பதான் வருகிறாயா?

வெளியூருக்கு சுற்றுப்பயணம் முடித்துவிட்டு, கொளத்தூருக்கு வந்து ஆய்வுப் பணிகளையும் முடித்துவிட்டு பிறகு அறிவாலயம் போய் தலைவரை சந்திப்பேன். அதற்கு தலைவர், ‘இப்பத்தான் வருகிறாயா?' என கேட்பார். நான் உடனே "இல்லை கொளத்தூர் போய்விட்டு வந்தேன்" என்பேன். அதற்கு ‘கொளத்தூரை விடவே மாட்டியா?' என்று கேட்பார்.

நிற்க போகிறாயா?

நிற்க போகிறாயா?

அதற்கு நான், "என் மீது நம்பிக்கை வைத்து மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளார்கள் என்பேன். இனிமே அங்கதான் நிற்க போகிறாயா? என்றுகேட்பார். அதற்கு நான், "நிற்கிறேனோ, இல்லையோ, நம் இயக்கம் தொடர்ந்து அங்கு வெற்றிபெற வேண்டும். அதற்காகத் தான் அங்கே மக்களை பார்க்க போகிறேன்" என்பேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

English summary
MK Stalin spoke emotionally about the Kolathur Constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X