சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தமிழ்நாட்டின்" வரலாறு திரும்புகிறது.. "ஹிந்தி" ரூட்டிலேயே தமிழை வளர்க்கும் திமுக.. இது கீழடி சபாஷ்

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்

Google Oneindia Tamil News

சென்னை: கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி முலம் தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் இந்தி என்றாலே நெருப்பு பொறி பறக்கும்.. அதற்கு காரணம் தமிழகத்தின் திராவிட வரலாறு அந்த மாதிரியான முத்திரைகளை அன்று பதித்ததுதான்.

மிக்சிகன் மாப்பிள்ளைக்கும் நாகர்கோவில் பெண்ணுக்கும் மேளம் கொட்டி தாலி கட்டி சென்னையில் கல்யாணம் மிக்சிகன் மாப்பிள்ளைக்கும் நாகர்கோவில் பெண்ணுக்கும் மேளம் கொட்டி தாலி கட்டி சென்னையில் கல்யாணம்

இதில் திமுகவுக்கு பிரதான பங்குள்ளது.. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 14 வயது மாணவனாக பங்கேற்ற கருணாநிதி, எப்போதெல்லாம் மத்திய அரசு இந்தியை கொண்டு வந்ததோ, அப்போதெல்லாம் இந்திக்கு எதிராக ஒலிக்கும் முதல் குரலாக அவரது குரலாகவே இருந்தது..

 கருணாநிதி

கருணாநிதி

உச்சக்கட்ட இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் எல்லாம் கருணாநிதியே தலைமை தாங்கினார்.. அன்றும் சரி இன்றும் சரி, எந்த காலத்திலும் மொழி திணிப்பை திமுக எதிர்க்கும்... மொழி திணிப்புக்கு எதிராக திமுக குரல் கொடுக்கும்... இந்தி என்றில்லை, அது எந்த மொழி திணிப்பாக இருந்தாலும், திமுக எதிர்க்கும்... தற்போது வரை அதில் உறுதிப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது.. இப்போது ஒரு நூதன யுக்தியை கீழடி விவகாரத்திலும் கையில் எடுத்துள்ளது.

 தமிழர்கள்

தமிழர்கள்

தமிழர்கள் பண்டைய நாகரீகத்தினர் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் இந்த கீழடியில்தான் உள்ளன.. கீழடியில் நடக்கும் அத்தனை அகழாய்வுகளும் உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளன.. இதுவரை நடந்த 7ம் கட்ட அகழாய்வில் இருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன... இதன் மூலம் தமிழர்கள் வரலாறு மிகவும் தொன்மையானது என்றும் கண்டறிப்பட்டுள்ளது.

அகழாய்வு

அகழாய்வு

தொடர்ந்து அகழாய்வுப் பணி நடத்தத் தொல்லியல் துறை நடைவடிக்கையும் மேற்கொண்டுள்ளது.. 7-ம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டது... இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்படும் என்று கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்து, கீழடியில் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதல்வர்

முதல்வர்

இந்நிலையில் கீழடி 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழ்வாய்வுபணிகளை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்..

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் 8ம் கட்டம் என்று பண்டை தமிழ் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 7 இடங்களில் அகழாய்வுகள் செய்ய தமிழக அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது.. இங்கு கிடைத்த அப்பொருட்களின புகைப்படங்களை தேசிய அளவில் கொண்டு செல்ல திமுக அரசு முயன்றுள்ளது..

தமிழ்நாடு

தமிழ்நாடு

இதன்மூலம் தமிழ்மொழி, மற்றும் தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை பறைசாற்றுவதுடன், இந்தி திணிப்பை எதிர்த்த திமுக, அதே ஆயுததத்தை தமிழை வளர்க்கவும் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும்.. எப்படி பார்த்தாலும், இனி இந்திய வரலாற்றை கீழடியில் இருந்துதான் பார்க்க வேண்டியதாய் வரலாறு திரும்பி வருகிறது..!

English summary
MK Stalin starts Keeladi excavation eighth phase work today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X