ஸ்டாலினின் தளபதிகள்.. செந்தில் பாலாஜி, பொன்முடி, கே என் நேரு வரை அமலாக்கத்துறையால் வந்த சிக்கல்
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு சட்ட ரீதியாக புதிய நெருக்கடி உருவாகி வருகிறது. திமுகவின் பலமே அதன் மாவட்டச் செயலாளர்கள் தான். ஒரு மாவட்டத்தை முதலமைச்சரின் பிரதிநிதியாக நின்று ஆளும் அதிகாரம் படைத்த "தளபதிகள்", அடுத்தடுத்து மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை பிடியில் சிக்கி வருகிறார்கள். செந்தில் பாலாஜி முதல் கே.என்.நேரு வரை இந்த பட்டியல் நீளுகிறது.
நேற்று சென்னை உயர்நீதிமன்றம் கே.என்.நேருவிற்கு எதிராக வழக்கு பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக செந்தில் பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அனிதா ராதாகிருஷ்ணன், ஐ பெரியசாமி என அடுத்தடுத்து அமலாக்கத்துறை வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜில்லாவிற்கும் முக்கியமானவர்கள் ஆவார். உதாரணத்திற்கு செந்தில் பாலாஜி கொங்கு மண்டலம், பொன்முடியை பொறுத்தவரை விழுப்புரம் கடலூர், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை பொறுத்தவரை வேலூர் ஜில்லா மொத்தமும், அனிதா ராதாகிருஷ்ணனை பொறுத்தவரை தூத்துக்குடி, ஐ பெரியசாமியை பொறுத்தவரை திண்டுக்கல் தேனியில் முக்கியமானவர். இதில் மத்திய மண்டலத்தின் முக்கியமான திமுக தலைவரான கே.என்.நேருவுக்கும் இப்போது சிக்கல் வந்துள்ளது.
செந்தில் பாலாஜி: கொங்கு மண்டலத்தின் 'சதுரங்க வேட்டை'
திமுகவின் அசுர பலமாக கொங்கு மண்டலத்தில் உருவெடுத்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கோவையில் திமுகவை வெற்றி பெறச் செய்த இவருக்குப் பரிசாக மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை வழங்கப்பட்டது. ஆனால், 'வேலைக்கு பணம்' என்ற பழைய விவகாரத்தில் அமலாக்கத்துறை இவரைக் கைது செய்து 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது. இது திமுகவின் கொங்கு மண்டல வியூகத்தில் ஒரு தற்காலிகத் தேக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது ஜாமீனில் வெளிவந்தாலும் இப்போது அமைச்சராக இல்லை. சட்டப் போராட்டங்கள் இன்னும் ஓயவில்லை
பொன்முடி: விழுப்புரம் முதல் கடலூர் வரை
வட தமிழகத்தில் திமுகவின் மூத்த முகமாகத் திகழ்பவர் பொன்முடி. உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த இவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் செம்மண் குவாரி விவகாரங்களில் அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வளையம் அமைத்தது. நீதிமன்றத் தீர்ப்பால் ஒருகணம் அமைச்சர் பதவியையே இழந்த இவர், உச்ச நீதிமன்றத் தலையீட்டால் மீண்டும் பதவிக்கு வந்தார். ஆனால் அமைச்சர் பதவியை இழந்துவிட்டார், விழுப்புரம் மண்டலத்தில் திமுகவின் தேர்தல் இயந்திரத்தை இயக்குபவரான பொன்முடிக்கு ஏற்பட்ட சிக்கல்கள், கட்சிக்கு பெரும் தலைவலியைத் தந்தன.
அனிதா ராதாகிருஷ்ணன் (மீன்வளத்துறை அமைச்சர்)
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டன. அதேபோல் வேலூர் மணல் குவாரி விவகாரத்தில் துரைமுருகன் மீதும், பணத்துக்காக ஓட்டு விவகாரத்தில் கதிர் ஆனந்த் மீதும் அமலாக்கத்துறை தனது பிடியை இறுக்கியது. கடந்த ஆண்டு கூட கதிர் ஆனந்த் இல்லத்தில் மெகா ரெய்டு நடத்தப்பட்டது.
கே.என்.நேரு: டெல்டாவின் 'நிர்வாகத் தூண்'
திருச்சியின் முகமாகவும், கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் இருக்கும் கே.என்.நேரு, தற்போது நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். 2,516 பணியிடங்களை நிரப்பியதில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில், இவர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சரின் சகோதரர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் மீது பாயும் இந்த விசாரணை, டெல்டா பகுதியில் நேருவின் செல்வாக்கைச் சிதைக்க எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த ஆயுதமாக மாறி இருக்கிறது
அரசியல் பின்னணி: இது ஏன் முக்கியமானது?
ஒவ்வொருவரும் ஒரு மண்டலம்: செந்தில் பாலாஜி (கொங்கு), பொன்முடி (வடக்கு), கே.என்.நேரு (டெல்டா), துரைமுருகன் (வேலூர்), அனிதா ராதாகிருஷ்ணன் (தூத்துக்குடி) இவர்கள் அந்தந்தப் பகுதிகளில் வெறும் அமைச்சர்கள் மட்டுமல்ல, தேர்தலை வெற்றிகரமாக நடத்தத் தேவையான நிதி மற்றும் நிர்வாகப் பலத்தைக் கொண்டவர்கள். இவர்களைச் சட்டச் சிக்கலில் முடங்கினால் திமுகவின் தேர்தல் பணிகள் பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது
தேர்தலில் தாக்கம்
2026 தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தளபதிகள் வரிசையாக நீதிமன்றப் படிக்கட்டுகளை மிதிப்பது கட்சிக்கு ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கி இருக்கிறது. "அரசியல் பழிவாங்கல்" என்று திமுக இதைச் சொன்னாலும், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அமலாக்கத்துறை சமர்ப்பிக்கும் ஆதாரங்கள் பொதுமக்களிடையே என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், தேர்தலில் எப்படி தாக்கம் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications