ஆளுநர் விளக்கத்தை ஏற்று இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படமாட்டாது என்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் விளக்கத்தை ஏற்று நாளை மறுநாள் தமது கட்சி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையைக் கண்டித்து நாளை மறுநாள் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் இன்று சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
தமிழ்நாட்டில் எந்த காரணத்தைக் கொண்டும் இந்தி திணிக்கப்படமாட்டாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உறுதி அளித்தார். மேலும இந்தி பற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என ஆளுநர் விளக்கம் தந்தார்.
ஆகையால் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநரின் விளக்கத்தை ஏற்று நாளை மறுநாள் திமுக நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. அத்துடன் தமது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக அமித்ஷாவும் விளக்கம் தந்துள்ளார்.
இந்தி திணிப்பை திமுக எப்போதும் எதிர்க்கும். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுமே போராடும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications