மனம் கனக்கிறது.. அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும்.. ஸ்டாலின்
Recommended Video
சென்னை: குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்டதை எண்ணி மனம் கனக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவரை மீட்கும் பணி பல மணி நேரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது.
சுஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுகின்றன. தமிழக மக்களும் சுஜித்தை மீட்க பிரார்த்தனைகளை முன் வைத்து வருகின்றனர். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் மனம் கனக்கிறது! குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம்.
அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும்! #Savesujithvinsen என தனது பதிவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications