ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவா? மு.க.ஸ்டாலின், வைகோ கண்டனம்
சென்னை: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் தீர்மானத்தை இந்தியா எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்கிற தகவலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மீதான போர்க்குற்றங்கள் விவகாரத்தில் அந்த நாடு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனப்படுகொலைக்குள்ளான தமிழருக்கு நீதி கிடைக்கும் செயல்பாடுகளையும் இலங்கை மேற்கொள்ளவில்லை.

இதற்கு ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
இந்த தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. முதலில் இத்தீர்மானத்துக்கு ஆதரவு- எதிர்ப்பு தெரிவிக்காமல் இந்தியா நடுநிலை வகிக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
தற்போது இந்த தீர்மான விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையையே இந்தியா எடுத்திருக்கிறது என இலங்கை வெளியுறவுத் துறை செயலாளர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தியாவின் இத்தகைய நிலைப்பாடு வன்மையான கண்டனத்துக்குரியது என மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இப்பிரச்சினையில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது கடும் அதிர்ச்சி தருகிறது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications