சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 தொகுதி இடைத்தேர்தல் நடத்த ஆணையம் மறுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம்- ஸ்டாலின் வார்னிங்

Google Oneindia Tamil News

சென்னை: 18 தொகுதிகளுடன் சேர்த்து 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மறுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதற்கு பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் லோக்சபா தேர்தலுக்கும் சட்டசபை இடைத்தேர்தலுக்கும் மிகப் பெரிய அளவில் பிரசாரம் நடத்தவுள்ளோம். ஊராட்சி சபை கூட்டங்கள் மூலம் ஏற்கெனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டோம்.

வழக்குகளை காரணம் காட்டாதீர்.. 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துக.. திமுக தீர்மானம்வழக்குகளை காரணம் காட்டாதீர்.. 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துக.. திமுக தீர்மானம்

3 தொகுதி

3 தொகுதி

40 லோக்சபா தொகுதி இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும். வழக்கை காரணம் காட்டி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன.

உள்நோக்கம்

உள்நோக்கம்

வழக்கை காரணம் காட்டி தேர்தலை நிறுத்துவதில் உள்நோக்கம் இருக்கிறது. தேர்தல் ஆணையம் இதுபோல் உள்நோக்கத்துடன் செயல்படக் கூடாது.

நீதிமன்றத்தை நாட முடிவு

நீதிமன்றத்தை நாட முடிவு

இது தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க எங்கள் எம்பிக்கள் சிவாவும், டிகேஎஸ் இளங்கோவனும் நேரம் கேட்டுள்ளனர். ஆணையரிடம் நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.

2 நாட்களில் தேர்தல் அறிக்கை

2 நாட்களில் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தவிர்த்து மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. மேற்கண்ட கட்சிகளுக்கு இன்று அல்லது நாளை தொகுதிகள் இறுதி செய்யப்படும். 2 நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியாகும். அதிமுக கூட்டணி கொள்கை கூட்டணி அல்ல என்றார் ஸ்டாலின்.

English summary
DMK President MK Stalin warns Election Commission that it would face the issue in Court if EC is not accepting to conduct byelection for 3 assembly constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X