வேலுமணியின் ஊழல்கள்...ஜெயிலுதான்.. பட்டியல் போட்டு பகிரங்கமாக எச்சரித்த ஸ்டாலின்.. ஆர்ப்பரித்த திமுக
சென்னை: தமிழக அமைச்சர் வேலுமணியின் ஊழல்களை அடுக்கடுக்காக பட்டியல் போட்டு பிரசாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்த உடனேயே சட்டப்படி தண்டிக்கப்படுவார் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மு.க.ஸ்டாலினின் இந்த நீண்ட பட்டியல் போட்டு பிரசாரம் செய்த போது திமுகவினர் ஆர்ப்பரித்து ஆராவாரம் எழுப்பினர்.
Recommended Video

கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து பேசியதாவது:
அமைச்சராக இருக்கக் கூடிய வேலுமணி, கோவை மண்டலத்தில் உள்ள 21 தொகுதிகளையும் நான் பார்த்து கொள்கிறே என்றார். இப்ப அவரை அவருடைய தொகுதியிலேயே முடக்கி வைச்சுட்டோம்.. இதுதான் திமுக.. இதுதான்டா திமுக மறந்துடாத.. மிஸ்டர் வேலுமணி.. இப்ப தெரியுதா? திமுகன்னா என்னான்னு?

திமுக தொண்டன் வெறித்தனம்
பதவியில் இருக்கும் போது ஆடுனீங்க.. பதவி இல்லாத போது ஆட்டத்தை எப்படி ஆட்டப் போறோம்னு பாருங்க.. பாருங்க... ஒவ்வொரு தொண்டனும் ஒவ்வொரு திமுக தொண்டனும் வெறித்தனமா இருக்கான்.. மறந்துடாதஈங்க...

நானே தலையிட்டு செய்வேன்..
நீங்க செஞ்ச அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமா.. அமைச்சர் பதவியை வெச்சுகிட்டு.. போலீசை வெச்சுகிட்டு... திமுக தொண்டர்கள் மீது என்னென்ன பொய் வழக்கு போட்டு.. எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினீங்க.. நாங்க மறந்துடுவோமா? மே 2-ந் தேதி வரை பொறுத்திருங்க...நீங்க இல்லை..நானே தலையிட்டு என்னன்ன செய்வேன்னு பாருங்க...

அடுத்த நாளே ஜெயில்தான்
நான் மிரட்டலை... அச்சுறுத்தலை.. சட்டப்படி... சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவங்க செஞ்சிருக்கும் ஊழல்களைப் பட்டியல் போட்டு நடவடிக்கை எடுப்போம். ஏற்கனவே ஆளுநரிடத்திலே ஊழல் பட்டியல் கொடுத்திருக்கிறோம்... அவர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ.. அடுத்த நாளே அத்தனை பேரும் சிறைக்குள்ள போறாங்களா இல்லையான்னு பாருங்க...பணத்தை வெச்சுகிட்டு அதிகாரத்தை வெச்சுகிட்டு போலீசை வெச்சுகிட்டு தேர்தலை நடத்திடலாம்னு நினைக்கிறீங்க..

நம்பர் 1 கொள்ளை
ஆனா வாக்களிக்கப் போறது மக்கள் என்பதை மறந்துடாதீங்க... இங்க மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறப் போகுது...அதில் எந்த சந்தேகமும் கிடையாது. எவ்வளவு பட்டவர்த்தனமா கொள்ளையடிச்சுகிட்டு இருக்காரு.. இந்த அமைச்சரவையிலேயே கொள்ளையடிக்கிறது நம்பர் 1- யாருன்னா இந்த வேலுமணிதான். நம்பர் 1 அவருதான்.

ஊழல் எத்தனை ஊழல்
அவருடைய ஊழலில் சிலவற்றை மட்டும் நான் சொல்கிறேன். சுண்ணாம்பு பவுடர் ஊழல், பினாயில் ஊழல், துடைப்பம் ஊழல், சாக்கடை ஊழல், எல்இடி பல்பு ஊழல், காப்பர் வயர் ஊழல், கோவை மாநகராட்சியில் ஊழல், சென்னை மாநகராட்சியில் ஊழல், கிராமப்புற பஞ்சாயத்துகளில் ஊழல், கொரோனா கால ஊழல், ஸ்மார்ட்சிட்டி ஊழல், அவரது சகோதரர் அன்பரசு சம்பந்தமான ஊழல், பினாமி ராஜன் மீதான ஊழல், பினாமி சந்திரசேகர் மீதான ஊழல், 8 பினாமி கம்பெனிகள், இந்த பினாமி கம்பெனிகளுக்கு கொடுத்த டெண்டர்களில் ஊழல், குப்பை அள்ளும் வண்டி கொள்முதல் ஊழல், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் திட்ட ஊழல், வேலை நியமன ஊழல், சிறுவாணி தண்ணீர் ஊழல், எம்சாண்ட் பயன்படுத்துவதில் ஊழல், வண்டி வண்டியாய் ஊழல், ஊழல்.. ஊழல்,, ஊழல்... ஊழல்... ஊழல்தான்.

இந்த ஸ்டாலின் விடமாட்டான்
இப்படி ஒவ்வொரு அமைச்சரையும் எடுத்துப் பார்த்தாலே நினைத்தாலே நமக்குதான் பயமா இருக்குது... எனவேதான் இத்தகைய கிரிமினல் கேபினட்டுக்கு நாம முற்றுப்புள்ளி வைத்தாகனும். முற்றுப்புள்ளி வைப்பதுடன் மட்டுமல்ல.. இதற்கு எல்லாம் காரணமாக இருக்கக் கூடியவர்கள் அத்தனை பேரையும் சட்ட ரீதியாக தனிநீதிமன்றங்கள் அமைத்து அந்த நீதிமன்றங்கள் முன் நிறுத்து உரிய தண்டனையைப் பெற்றுத் தருவோம். இதை தேர்தல் வாக்குறுதியிலேயே தெரிவித்தும் உள்ளோம். நிச்சயமா.. உறுதியாக.. யார் விட்டாலும் இந்த ஸ்டாலின் விடமாட்டான். இது உறுதி. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை!












Click it and Unblock the Notifications