என் இனிய அன்பு நண்பர் 'கேப்டன்' விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் 68-வது பிறந்த நாள் இன்று கொண்டாப்படுகிறது. பிறந்த நாளை முன்னிட்டு தமது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் விஜயகாந்த்.

அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், தலைவர் கலைஞரின் குறையாத பாசத்திற்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவரும், எனது இனிய அன்பு நண்பரும், தேமுதிக தலைவருமான 'கேப்டன்' @iVijayakant அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

68ல் அடியெடுத்து வைக்கும் அவர் பல்லாண்டு வாழவும் நலமும் குணமும் திடமும் பெற பெரிதும் விரும்புகிறேன்! என்று பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications