ஸ்டாலின் சொன்ன "அந்த" ஒத்த வார்த்தை.. அலர்ட் ஆன அதிமுக.. ஷாக்கில் உறைந்த தைலாபுரம்!
ஒரே பதிலை சொல்லி பாமகவுக்கு ஷாக் தந்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்
சென்னை: கலைஞர் கருணாநிதியைவிடவும், முக ஸ்டாலின் செமயாக பிளான் செய்கிறார் என்கிறார்கள்.. அப்படித்தான் இப்போதும் ஒரு தகவல் கசிந்து வருகிறது. ஒத்த வார்த்தையை சொல்லி, அதிமுகவை அலர்ட் செய்து விட்டாராம் திமுக தலைவர்..!
பாமக இப்போது பயங்கரமான குழப்பத்தில் உள்ளது.. எதற்காக உள்ஒதுக்கீடு விஷயத்தை டாக்டர் ராமதாஸ் தேர்தல் நெருங்கும் நேரத்தில் முன்வைத்து வருகிறாரோ தெரியவில்லை என்ற சந்தேகம் களத்தில் நிலவி வருகிறது.
வழக்கமாக கூட்டணி, சீட் பேரம், இன்ன பிற விஷயங்கள்தான் இதுபோன்ற நேரங்களில் நடப்பது வழக்கம்.. ஆனால், இந்த முறை எல்லாமே தலைகீழாக மாறிவருகிறது.. இடஒதுக்கீடு விஷயத்தில் ராமதாஸ் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறார்.. உறுதியாகவும் இருக்கிறார்.

கூட்டணி
அதேசமயம், அதிமுக தரப்பில் கூட்டணி உறுதி செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. வரும் 31ம் தேதி அந்த கட்சியின் நிர்வாக குழுக் கூட்டத்தில் விவாதித்து, முதல் வாரத்தில் பொதுக் குழுக் கூட்டத்தை கூட்டி, கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நல்ல பழம்
இதனிடையே, இடஒதுக்கீடு விஷயத்தில், அதிமுகவிடம் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக பல்வேறு அறிக்கைகள், ட்வீட்கள், பல கட்ட போராட்டங்களை பாமக மேற்கொண்டு வருகிறது.. அதேசமயம், திமுகவையும் இடஒதுக்கீடு விஷயத்தில் சாடி வருகிறது.. "20 சதவிகித இடம் ஒதுக்கீடு மட்டும் கிடைத்திருந்தால் வன்னியர்களில் பலரும் அரசு அதிகாரிகளாக வந்திருப்பார்கள்... திட்டமிட்டே கருணாநிதி ஏமாற்றி விட்டார்.. நல்ல பழத்தை கேட்ட எனக்கு அழுகிய கனியை கொடுத்துவிட்டார்.." என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

பதிலடி
இதற்குதான் ஸ்டாலின் கடலூரில் பதிலளித்து பேசும்போது, "வன்னியர் சமுதாயம், திமுக ஆட்சியில் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது... ராமதாஸ், தன் சொந்த ஆதாயத்திற்காக, சுய நலத்திற்காக, வன்னியர் சமுதாயத்திற்கு திமுக செய்த சாதனைகளை மறைத்து, பொய் பிரசாரம் செய்து வருகிறார்... பாமகவினர் திமுகவை நோக்கி இன்னும் அதிகமாக வரப்போகின்றனர், அதில் சந்தேகமே இல்லை" என்றார்.

விமர்சனம்
டாக்டர் ராமதாஸ் ரொம்ப நாளாகவே, திமுகவை இந்த விஷயத்தில் சாடி வரும் நிலையில், ஸ்டாலின் ஏன் திடீரென பாமகவுக்கு பதில் தந்தார்? ராமதாஸ் சுயநலக்காரர் என்று ஏன் கடுமையாக விமர்சித்தார்? என்று இப்போதுதான் தகவல் கசிந்துள்ளது.. திமுகவை பயன்படுத்தி, அதிமுகவிடம் பேரத்தை அதிகரிப்பதுதான் பாமகவின் பிளானாம்.. இதனைதான் இந்த முயற்சியை தடுக்கவே ஸ்டாலின் அப்படி பேசினாராம்.. அதுமட்டுமல்ல, ஏற்கனவே பாமகவினர் சிலர் திமுகவில் இணைந்திருப்பதை மனதில் வைத்துதான், பாமகவினர் திமுகவை நோக்கி வர வர போகிறார்கள் என்று பேசி, தைலாபுர தோட்டத்துக்கு ஷாக் தந்தாராம்..!

அலர்ட்
ஸ்டாலின் இவ்வாறு பேசியதையடுத்து, அதிமுக தரப்பும் உஷாராகிவிட்டதாம்.. பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தும், அது பாமகவின் தேர்தல் யுக்திக்கு பயன்படுமா? அல்லது 3வது அணி என்ற ஒன்றுடன் இணையும் சூழல் பாமகவுக்கு ஏற்படுமா தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும் ஸ்டாலின் வைத்த அந்த முற்றுப்புள்ளி வலுவாக அதிமுக கூட்டணிக்குள் எடுபட்டுள்ளது..!












Click it and Unblock the Notifications