எங்களை பதவியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரமில்லை.. ரத்தினசபாபதி அதிரடி
சென்னை: எங்களை எம்எல்ஏவாக வெற்றி பெற செய்தவர் ஜெயலலிதாதான், அதனால் எங்களை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க அதிகாரமில்லை என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 3 எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்குமாறு இவர்கள் 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. பின்னர் இதை பற்றி செய்தியாளர்களிடம் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் சொன்னதாவது:

கொள்கைகள்
"சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் கிடைத்தது. மூவரும் ஆலோசித்து சபாநாயகருக்கு உரிய பதில் அனுப்புவோம். ஜெயலலிதா தான் எங்களை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றி பெற வைத்தார். அந்த வெற்றியில் சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமையில்லை. ஜெயலலிதாவின் கொள்கைகளை எங்களை விட பெரிதாக மதிப்பவர்கள் யாரும் கிடையாது.

ஓ பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடித்தவர்கள் நாங்கள். ஆனால், அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக நடந்து கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. ஆட்சியை நீடிக்க வாக்களித்த எங்களை பதவியில் இருந்து நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வழக்கு
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று வழக்கு தொடர்ந்துள்ளோம். அதிமுகவின் சசிகலா அணியில் தான் நாங்க உள்ளோம். அதிமுகவின் ஒரு பிரிவுக்கே ஆதரவாக செயல்பட்டோம்.

சசிகலா
அமமுகவை கட்சியாக அறிவித்த நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்கவில்லை. ஓபிஎஸ் - இபிஎஸ் கையெழுத்திட்டுத் தான் சசிகலா அதிமுகவின் பொது செயலாளரானார். அவர் தொடர வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை" என்றார்.
-
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications