'யார் வந்தாலும் அரவணைக்க ரெடி'... கமல் கூப்பிட்டாச்சு! வருவாரா விஜயகாந்த்?
சென்னை: மக்கள் நீதி மய்யம், சமக, ஐஜேகே கட்சிகளின் கூட்டணிக்கு 'முதல் கூட்டணி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவிபச்சமுத்துவின் ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இதில், அதிமுகவில் இருந்து பிரிந்த தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளை இணைக்கவும் மக்கள் நீதி மய்யம் முயற்சி செய்துவருகிறது.
இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் இன்று இந்த கூட்டணி சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், சரத்குமார், ரவிபச்சமுத்து, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கமல்ஹாசன் தலைமனையிலான இந்த கூட்டணிக்கு 'முதல் கூட்டணி' என்ற பெயர் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த கமல், "நாங்கள் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் இடத்தில் இருக்கிறோம். யார் வந்தாலும் அரவணைப்போம். அவர்களை வரவேற்கும் இடத்தில் உள்ளோம். தேமுதிகவுக்கு எங்கள் கட்சியின் பொன்ராஜ் அழைப்பு விடுத்ததாக நானே செய்தி வாயிலாக தான் தெரிந்து கொண்டேன். அவர் அழைத்திருக்கிறார். இன்னும் நிலை அப்படியே இருக்கிறது என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications