கமல்ஹாசன் விரைவில் குணமடைய ரசிகர்கள், ம.நீ.ம தொண்டர்கள் வழிபாடு.. கோவில்களில் சிறப்பு பூஜை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தொற்றில் இருந்து பூரண நலம் பெற வேண்டி கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Recommended Video

    கமல்ஹாசன் விரைவில் குணமடைய ரசிகர்கள், ம.நீ.ம தொண்டர்கள் வழிபாடு.. கோவில்களில் சிறப்பு பூஜை!

    சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்று உறுதியானது. இதனை அவரே தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தினார்.

    கமலஹாசனுக்கு கொரோனா

    கமலஹாசனுக்கு கொரோனா

    ''அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என்று அவர் கூறி இருந்தார்.

    முதல்வர் ட்வீட்

    முதல்வர் ட்வீட்

    இதனை தொடர்ந்து அவர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    நடிகர் கமல்ஹாசன் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீள வேண்டும் எனப் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கமலஹாசன் விரைவில் குணமடைய வேண்டி விருப்பம் தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன்" எனப் பதிவிட்டார்.

    ரசிகர்கள் பிரார்த்தனை

    ரசிகர்கள் பிரார்த்தனை

    "கமலுக்கு சுவாச பாதையில் தொற்றும் காய்ச்சலும் உள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர் உடல் தொடர்ந்து சீரான நிலையிலேயே உள்ளது" என கமல்ஹாசன் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை விளக்கம் அளித்து இருந்தது. இந்த நிலையில் கமல்ஹாசனின் ரசிகர்களும். மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும், நிர்வாகிகளும் அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

     காஞ்சிபுரம் வழக்கறுதீஸ்வரர் கோவில்

    காஞ்சிபுரம் வழக்கறுதீஸ்வரர் கோவில்

    காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள வழக்கறுதீஸ்வரர் கோவிலில் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் எஸ்.கே.பி கோபிநாத் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வினாயகருக்கு தோப்பு கரணம் போட்டு தீவிர பிராத்தனையில் ஈடுபட்டனர். பின்னர் கமல்ஹாசன் பூரண நலம் பெற வேண்டி கோவிலில் உள்ள மூலவர் சிவ பெருமானுக்கு சிறப்பு பூஜையும் அபிசேக ஆராதனைகளும் நடைபெற்றது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+