அரசு தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களே.. ‘All in one ஆப்’ வருது.. அமைச்சர் அறிவிப்பு!
சென்னை: அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அமைப்புகள், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய தேர்வுகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அரசுத் தேர்வு விண்ணப்பதாரர்கள் எளிதாக விண்ணப்ப பணிகளை மேற்கொள்வதற்காக புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
சட்டப்பேரவையில் இன்று நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
TNPSC, TRB, TNUSRB உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வுகளின் விண்ணப்பதாரர்களுக்காக பிரத்யேக கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும்.
தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை இந்த கைபேசி செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பையும் இந்த செயலி மூலமாகவே மேற்கொள்ளலாம்.
மாநில குடிமைப் பணி அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் இடைக்கால பயிற்சிகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேரவையில் அறிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications