அது என்ன "போன் பே" மாதிரி "மொபைல் பே.." ம்ஹூம்.. பயன்படுத்த கூடாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தடை
சென்னை: பிரபல செல்போன் பண பரிவர்த்தனை செயலியான போன் பே தொடர்ந்த வழக்கில் மொபைல் பே என்ற மற்றொரு செல்போன் பண பரிவர்த்தனை செயலிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பே டிஎம், போன் பே, கூகுள் பே ஆகிய நிறுவனங்களின் வருகைக்கு பிறகு பெரும்பாலான கடைகளில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஏடிஎம் மையங்களுக்கு சென்று காத்திருக்காமல் இந்த செயலிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கி ஆர் கோட் மூலமாக பணத்தை செலுத்தி வருகின்றனர்.

மொபைல் பே
இந்த செயலிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மெடா நிறுவனம் வாட்ஸ் அப் பே வசதியை அறிமுகம் செய்தது. அதேபோல் பாரத் பே என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் வந்ததுதான் மொபைல் பே என்ற செயலி. இது பார்ப்பதற்கு ஃபோன் பே செயலியை போல் இருந்ததால் மக்கள் இதனையும் டவுன்லோட் செய்து பயன்படுத்த தொடங்கினார்கள்.

10 லட்சம் வாடிக்கையாளர்கள்
இதுவரை கூகுள் பிளே ஸ்டோரில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், ஃபோன் பே நிறுவனம், மொபைல் பே நிறுவனம் மீது வர்த்தக சின்ன பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

போன் பே வழக்கு
தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தை போன்றே மொபைல் பே நிறுவனத்தின் வர்த்தக சின்னம் உள்ளதால் அதன் செயலிக்கு தடை விதிக்குமாறு போன் பே நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரி இருந்தது. அந்த மனுவில், "மொபைல் பே செயலியின் லோகோ, ஃபோன் பே செயலியின் லோகோபோல் இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.

உயர்நீதிமன்றம் விசாரணை
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "இரு செயலிகளின் வணிக சின்னங்களும், லோகோக்களும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் பார்வையில் அவை ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளது என்றார்.

தடை விதிப்பு
எனவே மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, மொபைல் பே செயலியில் பணம் சேர்ப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அனுமதி அளித்தார். இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குவது தொடர்பா பதிலளிக்கும்படி கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications