Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இப்பவே கிளம்புங்க".. மீன்வளத்துறை மேஜர் வார்னிங்.. அவசர அவசரமா கரைதிரும்பும் மீனவர்கள்: மோக்கா புயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மழை வெளுக்க போவதால், புயல் அடிக்க போவதால், மீன்வளத்துறை அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது..!!

அக்னி நட்சத்திரம் இப்போதுதான் தொடங்கி உள்ளது.. ஆனால், அதற்குள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டி கொண்டிருக்கிறது.. மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தும், குளிர்ந்த காற்று வீசியும் வருகிறது.

mocha cyclone: Major announcement and return to shore immediately the fisheries department

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் காற்று சுழற்சி உருவாகும் என்றும், அந்த காற்று சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம்: மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது... அதுமட்டுமல்ல, இந்த ஆண்டின் முதல் புயல் இதுதான்.. இதற்கு "மோக்கா" புயல் என்று பெயர் வைத்துள்ளது ஏமன் நாடு.. இந்த புயல் மியான்மரை நோக்கி நகரும் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் மோக்கா புயல் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில், "தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது. இது வலுப்பெற்று, நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் படிப்படியாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்க கடலில் புயலாக வலுப்பெறும்.

மழை அதிகம்: இதனிடையே தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இன்று முதல் நாளை மறுதினம் வரை மிதமான மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவில் இருந்து, 4 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும். சென்னையில் அதிகபட்சமாக, 35 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.

mocha cyclone: Major announcement and return to shore immediately the fisheries department

தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் 7, 8 ஆம் தேதிகளில் 60 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
தென் கிழக்கு மத்திய வங்க கடல் பகுதிகளில் வரும் 10ம் தேதி மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும். மேற்கண்ட தேதிகளில் மீனவர்கள் சூறாவளி காற்று வீசும் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். கடலுக்குள் இருக்கும் மீனவர்கள், நாளை மறுதினத்திற்குள் கரைக்கு திரும்ப வேண்டும்" என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

உடனே வாங்க: இப்படிப்பட்ட சூழலில் மீன்வளத்துறை சார்பாக ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. அதில், "தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு தொகுதி உருவாகி அதன் பிறகு புயலாக வலுபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும்., நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்" என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, கடலுக்கு சென்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+