யாஸ் புயலுக்கு முன்னர் சென்னையில் மழை.. பூமியை குளிர்வித்த கோடை மழை
சென்னை: வங்கக் கடலில் வரும் மே 24 ஆம் தேதி புயல் உருவாகவுள்ள நிலையில் சென்னையில் கருமேகங்கள் சூழ மழை பெய்து வருகிறது.
Recommended Video
வங்கக் கடலில் வரும் 24-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாகவுள்ளதாகவும் அது புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ் டே புயல் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குஜராத் அருகே போர்பந்தர் இடையே கரையை கடந்தது.

குறைந்த காற்றழுத்தம்
தற்போது வங்கக் கடலில் வரும் மே 24 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாகவுள்ளதாகவும் அது புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை
இந்த புயல் ஒடிஸா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய காற்றழுத்தம் உருவாவதற்கு முன்பே சென்னையில் மழை பெய்யும் என சொல்லப்பட்டது. அதன்படி சென்னையில் இன்று மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

கனமழை
கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு இரவு போல் காட்சியளித்தது. தற்போது முகப்பேர் மேற்கு, அண்ணாநகர், அமைந்தகரை, மாங்காடு, ஆதம்பாக்கம், மந்தவெளி, கொரட்டூர், வடபழனி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

பலத்த காற்று
வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், விருகம்பாக்கத்திலும் மழை பெய்கிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதே நேரத்தில் பெங்களூரில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
-
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications