டீசல் மீதான கலால் வரி, செஸ் தடாலடி உயர்வு; ATF, டீசல் ஏற்றுமதி வரியும் உயர்வு - மத்திய அரசு
டெல்லி: மத்திய அரசு சனிக்கிழமை மாலை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உயர் வேக டீசல் மீதான கலால் வரி மற்றும் செஸ் தொகையை கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. இதோடு விமான எரிபொருள் மீதான windfall tax, டீசல் ஏற்றுமதிக்கான வரி என அடுத்தடுத்து 3 முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இப்புதிய உத்தரவின்படி, டீசலுக்கு விதிக்கப்படும் சிறப்பு கூடுதல் கலால் வரி (Special Additional Excise Duty) லிட்டருக்கு ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் (Road and Infrastructure Cess) லிட்டருக்கு ரூ.36 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து டீசல் மீதான மொத்த வரிச்சுமையை சுமார் 60 ரூபாய் என்ற அளவில் அதிகரிக்கும்.

மேலும் விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏவியேஷன் டர்பைன் ஃப்யூல் (ATF) எனப்படும் விமான எரிபொருளை வெளிநாட்டுக்கு அனுப்பும்போது விதிக்கப்படும் 'விண்ட்ஃபால் வரி' (windfall tax) என்ற சிறப்பு வரியை உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பு லிட்டருக்கு ரூ.29.50 ஆக இருந்த இந்த வரி இப்போது ரூ.42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது எரிபொருள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதேபோல், டீசலை வெளிநாட்டுக்கு அனுப்பும்போது விதிக்கப்படும் வரியும் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு லிட்டருக்கு ரூ.21.50 ஆக இருந்த வரி இப்போது ரூ.55.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது டீசல் ஏற்றுமதியை வர்த்தகத்தையும் பாதிக்கும். ஆனால் பெட்ரோல் ஏற்றுமதிக்கு எந்த வரி உயர்வும் இல்லை. அது பழைய படியே தொடரும்.
இந்த வரி உயர்வு அறிவிப்பு வெளியான உடனேயே நடைமுறைக்கு வரும் என நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிதி நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், வரி வருமானத்தை அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வால் பல்வேறு நிதி சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் வரி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் உயர் வேக டீசல் அதாவது High Speed Diesel, விமான எரிபொருள் மற்றும் டீசல் மீதான ஏற்றுமதி வரிகளை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு அதிகாரப்பூர்வ விளக்கம் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சகம் இந்த முடிவின் பின்னணியை விரைவில் தெளிவுபடுத்தும்.
ஏற்கெனவே உலக அளவில் கச்சா எண்ணெய் விலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்பு அதிகப்படியான ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்டு வருகிறது. நேற்றைய வர்த்தகத்தில் 100 டாலர் அளவில் உயர்ந்தவை குறைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் மதிப்பு 96.57 டாலராக உள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் மதிப்பு 95.20 டாலராக உள்ளது. இந்திய பேஸ்க்ட் பியூச்சர்ஸ் விலை 120.28 டாலர் அளவில் உள்ளது.
தற்போது இந்தியாவில் விமான எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது. இந்தப் புதிய வரி உயர்வு விமான நிறுவனங்களுக்கு மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும். விமான பயணக் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது என்று தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்துள்ளது. இதனால் எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் அரசு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள் மீது கூடுதல் வரி விதித்துள்ளது. இது அரசுக்கு கூடுதல் வருமானத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது ஏற்கெனவே எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள விமான நிறுவனங்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications