சரியில்லங்க.. முஷ்டி முறுக்கும் மோடி! எடப்பாடிக்கு போனை போட முடிவு? இது மட்டும் நடக்கலைனா அவ்ளோதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி போன் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக - பாஜக மோதல் குறித்து இவர்கள் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக - பாஜக மோதல் இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. ஆனாலும் இவர்கள் மோதலில் ஒரு சிறிய வெளிச்சம்.. சின்ன மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்னுடைய முடிவு அல்ல. அது தொண்டர்களின் முடிவு .

Modi to dial Edappadi Palanisamy to convince him or to arm-twist on BJP AIADMK alliance

தொண்டர்கள் எடுத்த முடிவு இது. அவர்கள் சொன்னதை கேட்டு.. அவர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து கூட்டணியை முறித்து உள்ளோம். இஸ்லாமியர்களே நீங்கள் எதிர்பார்த்தது போல கூட்டணியை முறித்து இருக்கிறோம். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி இல்லை. 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. இனி நாம் கூட்டணி வைக்கவே மாட்டோம். அதிமுக தனியாக கூட்டணி அமைக்கும்.

லோக்சபா தேர்தலில் தனியாக அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதே சமயம் பாஜகவில் சிலர் அதிமுகவுடன் கூட்டணி நீடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களாம். முக்கியமாக அதிமுக கூட்டணி இருந்தால்தான் நாம் வெற்றிபெற முடியும் என்று சிலர் நினைக்கிறார்களாம். இதனால் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

பேச்சுவார்த்தை: முக்கியமாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம்., கூட்டணி இணையுமா என்பதை விரைவில் முடிவு எடுப்போம் என்று சமீபத்தில் விபி துரைசாமி கூட கூறினார். அதேபோல் பாஜக கூட்டணி பற்றி பேச கூடாது. பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்ய கூடாது என்று எடப்பாடி பழனிசாமியும் கூறியுள்ளாராம்.

இது போக நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக கூட்டத்தில் பேசுகையில், கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். கூட்டணியில் இருந்து போனால் போகட்டும், அது அவர்களது விருப்பம். கூட்டணி விவகாரம் குறித்து பாஜக தலைமை தான் முடிவு எடுக்கும். நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். இனி டெல்லி முடிவு எடுக்கட்டும். தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; வாக்கு சதவிகிதம் உயரும். பாஜகவை வலிமையடைய செய்வதே என்னுடைய நோக்கம். 2024 தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெல்லும். 10 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும், கட்சியை பூத் வாரியாக வலுப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை தனது பேச்சில் குறிப்பிட்டார். இதெல்லாம் கூட்டணி இணைவதற்கான சிக்னலாக பார்க்கப்படுகிறது.

டெல்லி மோடி போன்: இந்த நிலையில்தான் திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி போன் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக - பாஜக மோதல் குறித்து இவர்கள் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடியை மீண்டும் வழிக்கு கொண்டு வரும் விதமாக இந்த போன் கால் இருக்கும் என்கிறார்கள்.

ஆனால் அதற்கு பின்பும் எடப்பாடி பழனிசாமி இறங்கி வரவில்லை என்றால் மோடி முஷ்டியை முறுக்குவார்., என்று டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+